பொழுதுபோக்கு

தாலி தொடர்பான கருத்து, வைரமுத்து பாலியல் சர்ச்சை பற்றி பேசிய நெட்டிசன்; சரியான பதிலடி கொடுத்த சின்மயி!

Published

on

தாலி தொடர்பான கருத்து, வைரமுத்து பாலியல் சர்ச்சை பற்றி பேசிய நெட்டிசன்; சரியான பதிலடி கொடுத்த சின்மயி!

பல மொழிகளில் பாடல் பாடி அசத்தியுள்ள பாடகி சின்மயி ஸ்ரீபதா, கவிஞர் வைரமுத்து மீதான தனது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தியது குறித்து இழிவான சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்தவருக்கு கடுமையான பதிலளித்துள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: தமிழ் மட்டும் இல்லாமல் பல மொழிகளில் பாடல்கள் பாடி முன்னணி பாடகியாக இருக்கும், சின்மயி எப்போதும் தனது கருத்தைச் சொல்வதில் பின்வாங்கியதில்லை, மேலும் இந்தியாவின் மீடூ (MeToo) இயக்கத்தின் போது இந்தத் துறையில் வெளிப்படையாகப் பேசிய சிலரில் இவரும் ஒருவர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி சொன்ன குற்றச்சாட்டு ஆண்டுகள் கடந்தாலும் இன்றைக்கும் பெரும் பரபரபபை ஏற்படுத்தும் ஒரு டாப்பிக்காக இருக்கிறது. இதனிடையே தற்போது சின்மயின் கணவர் ஒரு நேர்காணலில சொன்ன தகவல் கடுமையாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சின்மயியின் கணவரும், திரைப்பட இயக்குநருமான ராகுல் ரவீந்திரன் ஒரு நேர்காணலில் கூறிய ஒரு கருத்திலிருந்து தொடங்கியது. திருமண வாழ்க்கையில் ‘மாங்கல்யம்’ (தாலி) அணிவது என்பது சின்மயியின் சொந்த விருப்பம் என்று அவர் கூறியிருந்தார். இந்த கருத்து இணையத்தில் அதிகம் வைரலாக பரவியது. இந்தக் கருத்தை மேற்கோள் காட்டிய ஒரு ட்வீட்டுக்கு சின்மயி பதிலளிக்கையில், “அவர் ஒரு நேர்காணலில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னதுதான் ட்வீட்டாக மாறிவிட்டது. அவரை எல்லாவகையான வார்த்தைகளாலும் திட்டித் தீர்க்கும் ஆண்களின் கோபத்தைக் காணும்போது – உண்மையிலேயே, இங்குள்ள பெண்களை நினைத்து நான் கவலைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.எக்ஸ் தளத்தில் ஒரு பயனர் (பெயர்: evolazealot) மிகவும் இழிவான கருத்தை வெளியிட்டார். அதாவது, வைரமுத்துவால் தான் “மோசமாகத் தொடப்பட்டபோது” தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாத சின்மயி, மற்றப் பெண்களைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, தனது சொந்தப் பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.இதற்கு ஆவேசமாகப் பதில் அளித்த சின்மயி, “ஆம். ஏனென்றால் மோசமாகத் தொடப்பட்டதும், பாலியல் தொல்லைக்கு ஆளானதும் என்னுடைய தவறுதானே. உங்களைப் போன்ற ஆண்கள் ஏன் அர்த்தமற்ற ஒரு வாதத்தை நிரூபிக்க, என்னுடைய பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தையும், என்னை வதைத்தவரையும் (molester) இழுக்க வேண்டும்? தயவுசெய்து டெல்லியில் காற்றோடு காற்றாகக் கரைந்து போங்கள், நானும் மூச்சுவிட முடியும் என்று கூறியுள்ளார்.சின்மயிக்கும் இந்த குறிப்பிட்ட ட்ராலுக்கும் இடையேயான விவாதம் தொடர்ந்து அதிகரித்த நிலையில். அந்தப் பயனர், சின்மயி பாலியல் தொல்லை கொடுப்பவர்களை ஆதரிப்பதாகவும், அவர்கள் பக்கம் நிற்பதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டினார். தனது நிலைப்பாட்டைத் தொடர்ந்து ஆதரித்த சின்மயி, மீண்டும் அந்தப் பயனரிடம், “நான் ஒரு எளிமையான கேள்வியைக் கேட்கிறேன்: உங்களின் இந்த முட்டாள்தனமான வாதத்தில் என்னுடைய பாலியல் துஷ்பிரயோகத்தை ஏன் இழுத்தீர்கள்?” என்று கேட்டார். இதற்குப் பிறகு, தளத்தில் இருந்த மற்ற பயனர்கள் சின்மயிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.A post shared by Chinmayi Sripada (@chinmayisripaada)ஒரு பயனர், “இல்லை. மோசமாகத் தொடப்பட்டதும், பாலியல் தொல்லைக்கு ஆளானதும் ஒருபோதும் உங்கள் தவறு அல்ல. பாதிக்கப்பட்டவர்கள் மீது இரக்கம் காட்டப்பட வேண்டும், மற்றவர்களின் வாதத்தில் கருவியாகப் பயன்படுத்தப்படக்கூடாது,” என்று பதிவிட்டுள்ளார்.மற்றொரு பயனர், “சின்மயி, உங்களைத் திட்டும் ஒவ்வொரு ஆணைப் பற்றியும் கவலைப்படாமல் விடுங்கள்,” என்று கூறினார். 2018 ஆம் ஆண்டு மீடூ இயக்கம் உச்சத்தில் இருந்தபோது, சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் நடிகர் ராதாரவி மீது பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளைக் கூறினார்.விசாரணைகள் எதுவுமே உண்மையான பலனைக் கொடுக்காத நிலையில், சின்மயி தான் திரையுலகில் ஒதுக்கப்பட்டதாகவும் பல திட்டங்களில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறினார்.  சின்மயி எழுப்பிய மற்றொரு முரண்பாடான கருத்து என்னவென்றால், மாங்கல்யம் மற்றும் குங்குமம் போன்ற பாரம்பரியங்களுக்கு எதிராக அவர் பேசியதுதான். இவை அனைத்தும் சமூகக் கடமையாக அல்லாமல், தனிப்பட்ட விருப்பமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version