இலங்கை

நடிப்பு திறமையால் பலரையும் கவர்ந்த இளைஞன் விபத்தில் பலி!

Published

on

நடிப்பு திறமையால் பலரையும் கவர்ந்த இளைஞன் விபத்தில் பலி!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மயிலிட்டியை சேர்ந்த 35 வயதுடைய வசந்த் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன், மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகி, வீதியில் விழுந்தவேளை, அதே வீதியில் வந்த கொண்டிருந்த  கனரக வாகனம் இளைஞனுடன் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Advertisement

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் யூடியூப் தளமொன்றில் தன் நடிப்பு திறமையால் பலரையும் கவர்ந்த திறமையான ஒரு கலைஞன் என தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து  தொடர்பில் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version