இந்தியா
நியூயார்க் புதிய மேயராக பதவியேற்கும் இந்திய வம்சாவளி; யார் இந்த சோஹ்ரான் மம்தானி?
நியூயார்க் புதிய மேயராக பதவியேற்கும் இந்திய வம்சாவளி; யார் இந்த சோஹ்ரான் மம்தானி?
நியூயார்க் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆண்ட்ரூ க்யூமோவை தோற்கடித்து சாதனை படைத்துள்ளார். சோஹ்ரான் மம்தானி தற்போது நியூயார்க்கில் பரபரப்பாக பேசப்படும் அரசியல் கட்சி தலைவர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.யார் இந்த சோஹ்ரான் மம்தானி?உகாண்டாவில் பிறந்த இவர், தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் வளர்ந்தார். தனது ஏழாவது வயதில் நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்தார். பின்னர் பெளடின் கல்லூரியில் (Bowdoin College) பட்டம் பெற்றார்.இவரது தந்தை, மஹ்மூத் மம்தானி , கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். திரைப்பட தயாரிப்பாளரான இவரது தாயார் மீரா நாயர், ‘மான்சூன் வெட்டிங்’ மற்றும் ‘மிஸ்ஸிசிப்பி மசாலா’ போன்ற படங்களை தயாரித்துள்ளார்.சோஹ்ரான் மம்தானி, அரசியல் கட்சித் தலைவராக அவதாரம் எடுப்பதற்கு முன்பு ஒரு ராப் பாடகராக இருந்துள்ளார். ‘மிஸ்டர் கார்டமம்’ (Mr. Cardamom) என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். நியூயார்க் மேயர் தேர்தல் பிரச்சாரத்தின் போது சோஹ்ரான் மம்தானி மேலாடையில்லாமல் இருக்கும் அவரது பழைய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் அவரை கேலி செய்தனர். ஆனால், அவரது பிரச்சார உதவியாளரான ஆண்ட்ரூ எப்ஸ்டீன் அவருக்கு ஆதரவாகப் பேசினார். சொத்து மதிப்புஜனநாயக சோசியலிஸ்ட் கட்சியின் தலைவரான சோஹ்ரான் மம்தானி, நியூயார்க்கின் அடுத்த மேயராக தேர்தெடுக்கப்பட்டாலும் அவர் மில்லியனர் வாழ்க்கையை வாழவில்லை என்று கூறப்படுகிறது. 34 வயதான சோஹ்ரான் மம்தானி, உழைக்கும் வர்க்கத்தை மையப்படுத்தியே தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். பத்திரிகைகளில் கூற்றுப்படி, சோஹ்ரான் மம்தானியின் மொத்த சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.1.71 கோடி தான் என்று கூறப்படுகிறது. அவரது போட்டியாளர்களின் சொத்து மதிப்பில் ஒரு சிறிய பகுதி கூட சோஹ்ரான் மம்தானியிடம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.சோஹ்ரான் மம்தானி நியூயார்க்கில் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஆஸ்டோரியாவில் உள்ள வாடகை குடியிருப்பில் அவர் வசித்து வருகிறார். சொந்தமாக கார் கூட இல்லாத சோஹ்ரான் தனது தேவைகள் மற்றும் தேர்தல் பிரசாரத்திற்கு மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி வருகிறார். தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது சோஹ்ரான், வாக்காளர்களிடம் உருது, அரபிக், ஸ்பானிஷ் போன்ற பல மொழிகளில் உரையாடினார்.முற்போக்குச் செயல்திட்டத்தின் அடிப்படையில் போட்டியிட்ட பேருந்து மற்றும் குழந்தைப் பராமரிப்பை இலவசமாக்குதல் மற்றும் நகரத்திற்குச் சொந்தமான மளிகைக் கடைகளைத் போன்ற பல வாக்குறுதிகளை அளித்தார். சோஹ்ரான் இந்த அடிப்படை வாக்குறுதிகள் தான் தற்போது அவரை நியூயார்க் மேயராக வெற்றி பெற செய்துள்ளது.