தொழில்நுட்பம்

நோ டிரைவர், நோ ஃப்ராப்ளம்… அபுதாபி வீதிகளில் வலம் வரும் ஏ.ஐ. டெலிவரி வாகனங்கள்!

Published

on

நோ டிரைவர், நோ ஃப்ராப்ளம்… அபுதாபி வீதிகளில் வலம் வரும் ஏ.ஐ. டெலிவரி வாகனங்கள்!

அபுதாபி தனது அடுத்தகட்ட தொழில்நுட்ப பாய்ச்சலைத் தொடங்கியுள்ளது. இனி உங்க பேக்கேஜ்களைக் கொண்டு வர மனிதர்கள் தேவைப்பட மாட்டார்கள். அபுதாபி அரசு, ஓட்டுநர்களே இல்லாமல் சுயமாக இயங்கும் (Autonomous) டெலிவரி வாகனங்களுக்கான தனது முதல் முன்னோட்ட திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. செப். 15 அன்று அமீரகத்தின் ‘ஸ்மார்ட் மற்றும் தானியங்கி அமைப்புகள் கவுன்சில்’, வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு தானியங்கி டெலிவரி வாகனத்திற்கு அதிகாரப்பூர்வ லைசென்ஸ் பிளேட்டை (Licence Plate) வழங்கி அசத்தியுள்ளது.இந்தக் குட்டி வாகனங்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்ல… இவை மிகவும் புத்திசாலியானவை. அபுதாபியைச் சேர்ந்த ‘ஆட்டோகோ’ (Autogo) நிறுவனம் உருவாக்கி உள்ளது. எமிரேட்ஸ் போஸ்ட் (Emirates Post) மற்றும் 7X நிறுவனங்களின் டெலிவரி பிரிவான ‘EMX’. அபுதாபி ஊடக அலுவலகத்தின்படி, இந்த வாகனங்கள் மனித ஓட்டுநர்களே இல்லாமல் நகர வீதிகளில் பயணிக்கும். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஸ்மார்ட் மொபிலிட்டி அமைப்புகள் தான் இவற்றின் கண்கள், காதுகள் மற்றும் மூளையாகச் செயல்பட்டு, தடையின்றி டெலிவரிகளைச் செய்து முடிக்கின்றன. இந்த முன்னோட்டத் திட்டம் தற்போது மஸ்தார் நகரில் (Masdar City) தொடங்கப்பட்டுள்ளது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, படிப்படியாகத் தலைநகர் அபுதாபி முழுவதும் இந்த ரோபோ டெலிவரி சேவை விரிவுபடுத்தப்படும்.இந்தத் திட்டம் ஏதோ டெக்னாலஜியைக் காட்டுவதற்காக மட்டும் செய்யப்படவில்லை. இதன் பின்னணியில் அபுதாபியின் பிரம்மாண்டமான இலக்கு உள்ளது. 2040-ம் ஆண்டிற்குள், அபுதாபியில் நடக்கும் மொத்தப் பயணங்களில் 25% பயணங்களை ‘ஸ்மார்ட்’ ஆகவும் (தானியங்கி) மற்றும் ‘நிலையானதாகவும்’ (சுற்றுச்சூழலுக்கு உகந்த) மாற்றுவதே இவர்களின் நோக்கம். ஏற்கனவே அபுதாபியின் சில பகுதிகளில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி டாக்சிகள் (Autonomous Taxis) வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version