பொழுதுபோக்கு
பட்ஜெட் ரூ. 20 கோடி… வசூல் ரூ. 240 கோடி; 10 விருது வாங்கிய இந்தப் படத்தின் நடிகர் கைது; மோசடி வழக்கில் சிக்கிய தயாரிப்பாளர்கள்!
பட்ஜெட் ரூ. 20 கோடி… வசூல் ரூ. 240 கோடி; 10 விருது வாங்கிய இந்தப் படத்தின் நடிகர் கைது; மோசடி வழக்கில் சிக்கிய தயாரிப்பாளர்கள்!
கடந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து சாதனை படைத்த படம் என்ற பெருமையை பெற்றது ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குநர் சிதம்பரம் எழுதி இயக்கிய இந்த படத்தில் செளபின், ஸ்ரீநாத் பாஷி உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரிய வரவேற்பை பெற்றது.கொடைக்கானல் ‘குணா கேவ்’ குணா படத்தின் ரிலீஸுக்கு பின்பே அதிக வரவேற்பை பெற்றிருந்த நிலையில் ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு மேலும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல், ‘குணா’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே’ பாடல் ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு கேரளாவிலும் பட்டித் தொட்டி எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது.இன்றும் குணா குகைக்கு செல்லும் மக்கள் ‘டே சுபாஷே’ என்ற ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த டயலாக்கை சொல்லிதான் ஆர்ப்பரித்து வருகின்றனர். ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் ரூ.141 கோடியும் உலக அளவில் ரூ.240.5 கோடியும் பெற்று வசூலில் சாதனை படைத்தது. மலையாள சினிமாவில் அதிக வசூல் படைத்த படம் என்ற சாதனையை ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படம் பெற்றது.குணா குகை வடிவமைப்புஇப்படம் குறித்து இயக்குநர் சிதம்பரம் பேசியபோது, “இந்தப் பயணம் எளிதானது அல்ல, ஆனால் நம்பமுடியாத அளவிற்கு திருப்தி அளித்தது. நாங்கள் உண்மையாக உழைத்ததற்கான பலன் எங்களுக்குக் கிடைத்தது என்று நான் நம்புகிறேன். இது இன்னும் நிறைய சாதிக்கவும், புதியவற்றை உருவாக்கவும் எங்களை ஊக்குவிக்கிறது” என்றார்.மேலும், குகை வடிவமைத்தது குறித்து கலை இயக்குநர் அஜயன் சாலிச்சேரி கூறியதாவது, “ஆழமான பள்ளத்தை உருவாக்குவதற்காக 50 அடி ஆழமுள்ள பல குழிகள் அமைக்கப்பட்டு, அவை ஒன்றிணைக்கப்பட்டு மொத்தம் 150 அடி ஆழமான பள்ளம் உருவாக்கப்பட்டு கிளைமேக்ஸ் காட்சி எடுக்கப்பட்டது” என்றார். ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படம் கேரள அரசு திரைப்பட விழாவில் 10 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.வழக்கு’மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படம் பல வெற்றிகளை பெற்றாலும் சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. அதாவது, ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த செளபின் மற்றும் அவரது தயாரிப்புக் குழுவினருக்கு எதிராக இணை தயாரிப்பாளர் சிராஜ் வலையத்தாரா என்பவர் காவல்துறையில் வழக்கு தொடர்ந்தார். தான் படத்திற்காக ரூ.7 கோடி வரை முதலீடு செய்த நிலையில் ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படம் வெளியான பிறகு கிடைத்த லாபத்தில் தனக்கு எந்த பங்கும் தரவில்லை என்று சிராஜ் வலையத்தாரா குற்றம்சாட்டினார்.இதையடுத்து, சௌபின் சாகிர், அவரது தந்தை பாபு சாகிர் மற்றும் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் ‘பரவா ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆவர். சௌபின் சாகிர் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க