இலங்கை

பாடசாலையின் அதிபர் மற்றும் அவரது மகன் ஹெராயின் போதைப் பொருளுடன் கைது!

Published

on

பாடசாலையின் அதிபர் மற்றும் அவரது மகன் ஹெராயின் போதைப் பொருளுடன் கைது!

எப்பாவல பகுதியில் பாடசாலையின் அதிபர், அவரது மகன், ஒரு ஹோட்டலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயின் கையிருப்புடன் கைது செய்துள்ளனர்.

 எப்பாவல – தெடகல பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement

கைது செய்யப்பட்ட 2 நபர்களும் 54 மற்றும் 22 வயதுடைய எப்பாவல பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

 நாட்டில் நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்களின் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய தேசிய திட்டத்தின் கீழ் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version