இலங்கை
பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த இளைஞன் பலி!
பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த இளைஞன் பலி!
களுத்துறை தெற்கு பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த இளைஞன் ஒருவர் தீயணைப்பு வீரர்களின் மிகுந்த முயற்சியால் மீட்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளார். 25 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பற்ற கிணற்றுக்கு அருகில் வசிக்கும் ஒருவர் சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகளிடம் கூறியதை அடுத்து கிணற்றில் தேடிப்பார்த்த போது கிணற்றில் யாரும் இருக்கவில்லை. எனினும், களுத்துறை நகராட்சி மன்றத்தின் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களின் உதவியுடன், கிணற்றில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டது.
இதன்போது கிணற்றில் விழுந்த இளைஞன் கிணற்றின் அடிப்பகுதியில் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மிகுந்த முயற்சியுடன் இளைஞன் மீட்டகப்பட்டார். குறித்த இளைஞன் களுத்துறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் எவ்வாறு கிணற்றுக்குள் விழுந்தார் என்பது தெரியாத நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.