டி.வி

பிக் பாஸில் வேலையை காட்டிய ஹவுஸ்மேட்ஸ்.. ! துஷாருடன் ருத்ர தாண்டவமாடிய திவ்யா

Published

on

பிக் பாஸில் வேலையை காட்டிய ஹவுஸ்மேட்ஸ்.. ! துஷாருடன் ருத்ர தாண்டவமாடிய திவ்யா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் ஆரம்பிக்கப்பட்டு இன்று 31 வது  நாளில் காலடி வைத்துள்ளது. தற்போது  இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில்  திவ்யா கணேஷுடன் துஷார்  மோதும் சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு  ஒரு மாதத்தை எட்டி உள்ளது.  ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் 10 ஆண் போட்டியாளர்கள்,  9 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை  என மொத்தம் 20 பேர் கலந்து கொண்டனர். இதில் இருந்து, சொந்த விருப்பத்தினால் நந்தினி நிகழ்ச்சியை விட்டு வெளியேற,  அதன் பின்பு  பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை இறுதியாக கலையரசனும் எலிமினேட் ஆகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்றனர். இந்த நிலையில், இன்று வெளியான முதலாவது ப்ரோமோவில்  பிக் பாஸ் ஹவுஸ்க்கு வந்த ஹெஸ்ட் , உங்க ஆட்கள் எல்லாரும் குழப்பத்தில இருக்காங்க, எங்களுக்கு சர்வீஸ் பண்ண சொல்லுங்க என்று திவ்யாவிடம் மஞ்சரியும் தீபக்கும் சொல்லுகின்றார்கள்.இதனால் திவ்யா ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் கூப்பிட்டு, எல்லோரும்  நாலு நாலு பேரா அவங்க அவங்க டீமோட நில்லுங்க..   இன்னும் 5 மினிட்ஸ்ல யூனிபார்ம் ஓட ரெடியா இருக்க வேண்டும்.. அப்படி இல்லை என்றால் டீமுடன் வெளியே செல்ல வேண்டும் என்று சொல்கின்றார். இதன்போது திவ்யாவிடம் துஷார் எதோ சொல்ல முனைய,  நான் எதுவும் கேட்கிற மாதிரி இல்லை என்று திவ்யா தனது காதுகளை பொத்துகின்றார்.. ஆனால் துஷார் மீண்டும் நான் சொல்வதை கேளுங்கள் என்று கூறவும், அவர் கேட்கவில்லை. இதனால் அவர்கள்  இருவருக்கும் இடையில்  நடக்கும் சண்டையை அமித் தடுக்க பார்க்கின்றார். ஆனாலும் துஷார்  மத்தவங்க போல என்னால அமைதியாக இருக்க முடியாது என்று சொல்ல, இத்தனை நாள் என்ன பண்ணிட்டு இருந்திங்க என்று திவ்யா சத்தம் போடுகிறார். இதுதான் தற்போது வெளியான முதல் ப்ரோமோ..

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version