பொழுதுபோக்கு

பிறந்து 11 மாதங்கள் தான், அதற்குள் 2 உலக சாதனை; மகளை பற்றி பெருமை அடையும் புகழ்!

Published

on

பிறந்து 11 மாதங்கள் தான், அதற்குள் 2 உலக சாதனை; மகளை பற்றி பெருமை அடையும் புகழ்!

விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் மூலம பிரபலமாகி தற்போது முன்னணி காமெடி நடிகராகவும், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ள புகழ் தனது மகள் 2-வது உலக சாதனை நிகழ்த்தியுள்ள புகைப்படத்தை நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புகழ், சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார். இதன் மூலம் அவருக்கு பட வாய்ப்பு கிடைத்த நிலையில், அருண்விஜய் நடிப்பில் வெளியான யானை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். மிஸ்டர் ஜூ கீப்பர் என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி இருந்தார். சினிமாவில் பிசியாக இருந்தாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் புகழ், தற்போதுவரை அந்நிகழ்ச்சியில் கோமாளியாக அசத்தி வருகிறார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலி பென்சி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தமபதிக்கு கடந்த 2023-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. ரிதன்யா என்ற இந்த குழந்தை தனது அப்பா புகழின் பெயருக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறு வயதிலேயே உலக சாதனைகளை படைத்து வருகிறார். கடந்த ஆண்டு 2 கிலோ டம்பெல்ஸை 17 விநாடிகள் தூக்கி அதிக நேரம் தூக்கிய குழந்தை என்ற உலக சாதனையை படைத்திருந்த ரிதன்யா தற்போது மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். பிறந்த 11 மாதம் 14 நாட்களில் அதிக படிகள் ஏறிய குழந்தை என்கிற சாதனையையும் ரிதன்யா படைத்திருக்கிறார். இந்த சாதனையை படைத்ததன் மூலம் சர்வதேச சாதனை புத்தகத்தில் (International Book of Records) இடம்பிடித்துள்ளார். ரிதன்யா மொத்தம் 45 படிகள் தொடர்ச்சியாக ஏறி இந்த உலக சாதனையை படைத்திருக்கிறார். A post shared by Rithanyapugazhenthi (@rithanyapugazhenthi)இது குறித்து தனது இன்ஸ்டாகிராம பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள புகழ், இதோ 2-வது உலக சாதனை பிறந்து 11 மாதங்களில் முடிச்சாச்சு என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், புகழின் ரசிகர்கள பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version