இலங்கை
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம்(4) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், கலட்டி சந்திக்கு அண்மையில் இளைஞனை கைது செய்து சோதனையிட்ட போது, அவரது உடமையில் இருந்து போதைப்பொருளை பொலிஸார் மீட்டனர்.
குறித்த இளைஞன் கோப்பாய் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் கைது செய்யப்ட்ட இளைஞனை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.