இலங்கை
வடக்கு தென்னை முக்கோண வலய விவசாயிகளுக்கு மானியம் வழங்க தீர்மானம்!
வடக்கு தென்னை முக்கோண வலய விவசாயிகளுக்கு மானியம் வழங்க தீர்மானம்!
வடக்கு தென்னை முக்கோண வலய தெங்கு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
புதிதாக தெங்கு பயிரிடப்படும் காணிக்கு நீர் வசதிகளைப் பெறுவதற்காக இந்த மானியம் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் 1 மில்லியன் கன்றுகளை வளர்க்கும் திட்டத்துடன் இணைந்து இந்த மானியம் வழங்கப்படவுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார்
லங்கா4 (Lanka4)
அனுசரணை