இலங்கை
வட்டுக்கோட்டையில் போதைப்பொருட்களுடன் பலர் கைது!
வட்டுக்கோட்டையில் போதைப்பொருட்களுடன் பலர் கைது!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், பல வகையான போதைப்பொருட்களுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 10 நாட்களாக வெவ்வேறு இடங்களில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இவ்வாறான கைதுகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தியவேளை, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.