இலங்கை

வவுனியாவில் இளம் குடும்பப் பெண் கொடூரமாக கொலை!

Published

on

வவுனியாவில் இளம் குடும்பப் பெண் கொடூரமாக கொலை!

வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின்  சடலம் பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

Advertisement

உயிரிழந்த பெண்ணின் தாயார் குறித்த பெண்வசித்து வரும் வீட்டுக்கு நேற்று காலை சென்ற போது  தனது மகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சம்பவத்தில் 25 வயதுடைய இ.சிந்துஜா என்ற ஒரு பிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இச் சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட  நிலையில், சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று  பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணின்  கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையால் குறித்த இறப்பு நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார்  சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை பெண்ணின் கணவர் அவரது 02வயதான பெண் குழந்தையுடன்  தலைமறைவாகியுள்ளார் . இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version