இலங்கை
வவுனியா பெண்கொலை; மாயமான கணவன் பொலிஸில் சரண்
வவுனியா பெண்கொலை; மாயமான கணவன் பொலிஸில் சரண்
இந்நிலையில் வவுனியா பூம்புகார் பகுதியில் மனைவியை கழுத்து வெட்டிக்கொலை செய்துவிட்டு 2 வயது பெண் குழந்தையுடன் மாயமான சந்தேக நபரான கணவன் ஏறாவூர் பொலிஸில் சரண் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வவுனியா, பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலத்தை நேற்று (4) பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த பெண் அவரது கணவர் மற்றும் பெண் குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டுக்குச் சென்று பார்த்தபோது தனது மகள் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
சம்பவத்தில் இ.சிந்துஜா (வயது 25) என்ற ஒரு பிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தின் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டமையால் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, பெண்ணின் கணவர், அவரது இரண்டு வயது பெண் குழந்தையுடன் தலைமறைவாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், கணவன் பொலிசில் சரணடைதுள்ளதாக கூறப்படுகின்றது.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான 33 வயதுடைய கணவன் தனது மகளுடன் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.