இந்தியா

வீடு தேடி வரும் வாக்குச்சாவடி அலுவலர்கள்: புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடக்கம்

Published

on

வீடு தேடி வரும் வாக்குச்சாவடி அலுவலர்கள்: புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடக்கம்

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நேற்று தொடங்கியது. சிறிய மாநிலமான புதுச்சேரியில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியைத் தேர்தல் துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதன் பகுதியாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை விநியோகித்து வருகின்றனர்.வீடு வீடாக விநியோகம்புதுச்சேரி முழுவதும் இந்த சிறப்புத் திருத்தப் பணியில் 962 வாக்குச்சாவடி அலுவலர்கள், 1,376 அரசியல் கட்சி முகவர்கள், 60 வாக்காளர் பதிவு அதிகாரிகள் மற்றும் 2 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கும் நேரில் சென்று, அச்சிடப்பட்ட ‘வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை’ ஒப்புகைச் சீட்டுடன் வழங்கி வருகின்றனர். ஒரு வாக்காளருக்கு ஒரு படிவம் வீதம் விநியோகம் செய்யப்படுகிறது.வாக்காளர்கள் செய்ய வேண்டியவைவாக்காளர்கள், தங்களுக்கு வழங்கப்படும் கணக்கெடுப்பு படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். அதில், தங்களது புகைப்படத்தை ஒட்டி, கையொப்பமிட்டு டிச.4-க்குள் தங்களுக்கு படிவம் வழங்கிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். படிவத்தில் பிறந்த தேதி, செல்போன் எண், தந்தை/தாய்/இணையர் பெயர் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை கட்டாயம் பதிவிட வேண்டும். விருப்பம் உள்ளவர்கள், ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் விவரங்களையும் பதிவிடலாம். புதிய வாக்காளர்கள் அல்லது வெளியூர்களில் இருந்து புதிதாகக் குடிபெயர்ந்தவர்கள், வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 6 மற்றும் 8-ஐப் பெற்று, பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.ஆவணங்கள் எப்போது தேவை?கணக்கெடுப்பு படிவத்தை அலுவலரிடம் திரும்பக் கொடுக்கும்போது, அதனுடன் வாக்காளர்கள் வேறு எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. இருப்பினும், பெயர்ப் பொருத்தமின்மை அல்லது ஆட்சேபனைகள் இருக்கும் பட்சத்தில், கள ஆய்வுக்கு வரும் வாக்குச்சாவடி அலுவலர்கள் கேட்கும் 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.முக்கிய தேதிகள்படிவம் ஒப்படைக்க இறுதி நாள்: டிசம்பர் 4வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: டிசம்பர் 9ஆட்சேபனை மற்றும் உரிமை கோரல்: ஜனவரி 8 வரைஇறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பிப்ரவரி 7ஆன்லைன் வசதிவாக்காளர்கள் தங்களது பெயர், உறவினர்களின் பெயர்கள் மற்றும் முந்தைய வாக்காளர் பட்டியல் விவரங்களை https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும், வாக்காளர்கள் தங்கள் விவரங்களை நேரடியாக voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம் அல்லது உதவிக்கு தங்கள் பகுதி வாக்குச்சாவடி அலுவலர்களை அணுகலாம். இந்த தகவல்களை தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவகர் தெரிவித்துள்ளார்.செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version