இலங்கை

வைத்தியசாலையில் பெண்கள், கர்ப்பிணிகளின் அந்தரங்கமான காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

Published

on

வைத்தியசாலையில் பெண்கள், கர்ப்பிணிகளின் அந்தரங்கமான காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

    இந்தியாவின் குஜராத் மாநில மகப்பேறு வைத்தியசாலையில், நோயாளிகளின் பாதுகாப்புக்காகப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவால் , வைத்தியசாலையில் பெண்கள், கர்ப்பிணிகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறியுள்ளதாவது,

Advertisement

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பாயல் மகப்பேறு வைத்தியசாலையில் சிசிடிவி கெமரா வலையமைப்பிற்கு மிக எளிமையான கடவுச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர்.

இதை தெரிந்து கொண்ட ஹேக்கர்கள், வைத்தியசாலையின் கெமராக்களின் பதிவுகளை சட்டவிரோதமாக தேடியுள்ளனர்.

கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் இந்த வைத்தியசாலை மற்றும் நாடு முழுவதும் இதேபோல் பாதுகாப்பு குறைவாக இருந்த அமைப்புகளிடம் இருந்து 50,000 வீடியோ காட்சிகளை இந்தக் கும்பல் திருடியுள்ளது.

Advertisement

திருடப்பட்ட இந்த வீடியோக்களில், பெண் நோயாளிகளின் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான மிகவும் அந்தரங்கமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த வீடியோக்களை முதலில் தனிப்பட்ட டெலிகிராம் சேனல்களில் பரப்பிய கும்பல், பின்னர் அவற்றை யூடியூப் போன்ற பொது தளங்களிலும் பதிவேற்றி விநியோகித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்த அகமதாபாத் சைபர் கிரைம் பிரிவு பொலிஸார், வீடியோக்களைப் பரப்பிய பலரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version