தொழில்நுட்பம்
2025-ன் கடைசி சூப்பர்மூன்: இன்றிரவு 30% பிரகாசமாகத் தெரியும் நிலா… எப்போது, எப்படி பார்ப்பது?
2025-ன் கடைசி சூப்பர்மூன்: இன்றிரவு 30% பிரகாசமாகத் தெரியும் நிலா… எப்போது, எப்படி பார்ப்பது?
நவம்பர் மாதம், “சூப்பர்மூன்” (November Supermoon) என்றழைக்கப்படும் அற்புதமான வானியல் நிகழ்வுகளில் ஒன்றைக் கொண்டு வரத் தயாராக உள்ளது. நிலவு பூமிக்கு மிக அருகில் வரும்போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது. இந்த நவம்பரில், சந்திரன் பூமியிலிருந்து 3,57,000 கி.மீ. தொலைவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2025-ம் ஆண்டின் அருகாமையான தூரம் என்று குறிப்பிடப்படுகிறது. இது இந்த ஆண்டின் 3-வது சூப்பர் மூன் மற்றும் பெரும்பாலும் இதுவே கடைசி சூப்பர்மூன் ஆகவும் இருக்கும். இந்த வானியல் நிகழ்வைப் பற்றிய அனைத்து விவரங்களை இங்கே விரிவாகக் காணலாம்.நவம்பர் சூப்பர்மூன்: எப்போது, எங்கே பார்க்கலாம்?2025 நவம்பர் சூப்பர்மூன், இந்திய நேரப்படி 2025, நவம்பர் 5 ஆம் தேதி (புதன்கிழமை) இன்றிரவு தனது உச்சத்தை அடையும். இந்த நிகழ்வு நவம்பர் 6 ஆம் தேதியின் அதிகாலை வரை நீடிக்கும். சர்வதேச நேரப்படி (ET), நவ.6, 2025 அன்று அதிகாலை 1:23 மணிக்கு சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருக்கும். இந்த நிகழ்வு நியூயார்க், மியாமி, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், வாஷிங்டன் மற்றும் பல நகரங்களில் தெரியும். அந்தந்தப் பகுதிகளின் உள்ளூர் நேரத்தைப் பொறுத்து இது தெரியும் நேரம் மாறுபடலாம்.சூப்பர்மூன் இந்தியாவில் தெரியுமா?ஆம், 2025 நவம்பர் சூப்பர்மூன் இந்திய நகரங்களிலிருந்தும் தெளிவாகத் தெரியும். இந்திய நேரப்படி (IST) மாலை 6:49 மணிக்கு இந்த நிகழ்வைக் காண முடியும். வழக்கமான நாட்களை விட இந்த சூப்பர்மூன் அன்று சந்திரன் 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றும் என்று கூறப்படுகிறது. உங்கள் நகரத்தில் இந்த நிகழ்வின் சிறந்த காட்சியைக் காண, உயரமான கட்டிடங்கள் குறைவாகவும், காற்று மாசுபாடு குறைவாகவும் உள்ள இடத்திற்குச் செல்ல முயற்சிக்கவும். மேலும், இந்த நிகழ்வைக் காண எந்த சிறப்பு உபகரணங்களும் தேவையில்லை, வெறும் கண்களாலேயே காணலாம்.சூப்பர்மூன் எவ்வாறு ஏற்படுகிறது?சந்திரன் பூமியைச் சுற்றுகிறது, ஆனால் அதன் பாதை ஒரு சரியான வட்டம் அல்ல, அது நீள்வட்டப் பாதையாகும். இதன் பொருள் சந்திரன் சில சமயங்களில் பூமிக்கு மிக நெருக்கமாகவும், சில சமயங்களில் அதிக தூரத்திலும் இருக்கும். சந்திரன் தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான புள்ளிக்கு வரும்போது “சூப்பர்மூன்” ஏற்படுகிறது.