பொழுதுபோக்கு
25 வயது ஹீரோவுக்கு 49 வயது ஹீரோயின் ஜோடி; அஜித்துடன் நடித்த இந்த நடிகை காதல் படத்தில் அறிமுகம் ஆனவர்!
25 வயது ஹீரோவுக்கு 49 வயது ஹீரோயின் ஜோடி; அஜித்துடன் நடித்த இந்த நடிகை காதல் படத்தில் அறிமுகம் ஆனவர்!
சினிமாவில் நடிகர்களுக்கு மட்டும் வயது வித்தியாசம் இல்லை என்ற சொல்லலாம். தனது மகளாக நடித்த ஒரு நடிகையுடன் பிற்காலத்தில் ஜோடியாக நடிப்பார்கள். அதேபோல், தன்னை விட 2 மடங்கு வயது குறைந்த நடிகையுடன் டூயட் பாடுவார்கள். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நடிகர் ரஜினிகாந்தை தான் சொல்ல வேண்டும். மீனாவுக்கு அப்பாவாகவும், அவருக்கே கணவர் காதலர் என்று நடித்துள்ளார். அதேபோல் லிங்கா படத்தின் தனது வயதுள்ள ஒரு நடிகரின் மகளுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்திய சினிமாவில் இப்படி பல உதாரணங்களை சொல்லலாம். ஆனால் நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவர்களுக்கு நாயகி வாய்ப்பு கிடைப்பது அரிதான ஒன்று. அதேபோல் தன்னை விட வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடிப்பது என்பது சினிமாவில் அவ்வப்போது நடக்கும். அந்த வகையில் மகேஷ்பாபுவுடன் ஒரு பாடலில் நடனமாடிய ரம்யா கிருஷ்ணன், குண்டூர் காரம் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார். அந்த வகையில் 49 வயதான நடிகை ஒருவர் 25 வயது ஹீரோவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த நடிகை தமிழில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களில் நடித்திருந்த நடிகை தபு தான். முக்கியமாக இது திரைப்படம் இல்லை வெப் சிரீஸ். இந்த வெப் சிரீஸில் அவருக்கு ஜோடியாக நடித்த 25 வயது இளைஞர் பிரபல பாலிவுட் நடிகர் இஷான் கட்டர். அந்த தொடரின் பெயர் ஏ சூட்டபுள் பாய் (A Suitable Boy). இந்த வெப் தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு வெளியான இந்த வெப் சிரீஸல், தபு – இஷான் கட்டர் ஆகியோருடன் பல முன்னணி நட்சததிரங்கள் நடித்திருந்த நிலையில், மீரா நாயர் இந்த வெப் சிரீஸை இயக்கியிருந்தார். விக்ரம் சேத் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான இந்த வெப் சிரீஸ், 6 எபிசோடுகளை கொண்டது. இந்த தொடர் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 49 வயதான தபு – 25 வயதான இஷான் கட்டர் உடன் காதல் காட்சிகள் இருந்தாலும் இந்த காட்சிகள், இருவருக்கும் இடையிலான கெமிஸ்டரியை பிரதிபளிக்கும் வகையில் இருந்தது.1950களில் நடக்கும் காதல், அரசியல் உள்ளிட்ட விஷயங்களை பின்னணியாக கொண்டு வரலாற்று சிரீஸாக வெளியான இந்த தொடரில் நடித்த நடிகை தபுவுக்கு தற்போது, 54 வயதாகும் நிலையில், இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். தமிழில் கடைசியாக அவர் தமிழில் ஜோதிகா நடித்த ‘சிநேகிதியே’ படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.