பொழுதுபோக்கு

46 ஆண்டுக்கு பின் மெகா கூட்டணி; சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த்: ரிலீஸ் அப்டேட்டுடன் வந்த அறிவிப்பு!

Published

on

46 ஆண்டுக்கு பின் மெகா கூட்டணி; சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த்: ரிலீஸ் அப்டேட்டுடன் வந்த அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் ரஜினிகாந்த், சமீப காலமாக இளம் இயக்குனர்களின் படங்களில நடித்து வந்த நிலையில், தற்போது ஒரு முன்னணி காமெடி நடிகருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இவரின் 173-வது படத்தை சுந்தர்.சி இயக்க, கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக ரஜினிகாந்த் சமீபகலமாக, பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நெல்சன், லோகேஜ் கனகராஜ், சிறுத்தை சிவா உள்ளிட்ட இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வந்தார். இதில் நெல்சன் இயக்கததில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்று வசூலை வாரி குவித்தது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகின்றார். காற்றாய் மழையாய் நதியாய்பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்!ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் #Thalaivar173#Pongal2027@rajinikanth#SundarC#Mahendran@RKFI@turmericmediaTMpic.twitter.com/wBT5OAG4Auஇதனிடையே ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் சுந்தர்.சி என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்காலிகமாக ‘தலைவர் 173’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம் தயாரிக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இந்தப் படத்தை 2027 பொங்கலுக்கு வெளியிடுகிறது.இந்தச் செய்தியை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இன்று (நவம்பர் 5) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “இந்திய சினிமாவின் இரு பெரும் தூண்களான இந்தக் கலைஞர்களின் மைல்கல் கூட்டுப் பயணம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் ஐந்து தசாப்த கால நட்பையும் சகோதரத்துவத்தையும் கொண்டாடுகிறது. இந்த உறவு தலைமுறை தலைமுறையாக கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.A post shared by Raaj Kamal Films International (@rkfioffl)மேலும், “ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 44 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், தலைவர்173 திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அசாத்தியமான திரை ஆளுமையையும், சுந்தர் சி-யின் இயக்கத்தையும் ஒன்றிணைக்கிறது. கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் ஆகியோரால் இந்தப் பிரம்மாண்டமான தயாரிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் படம், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் 46 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் படமாக அமைகிறது. சுந்தர் சி. இதற்கு முன்னர் ரஜினிகாந்தை வைத்து ‘அருணாச்சலம்’ என்ற திரைப்படத்தையும், கமல்ஹாசனை வைத்து விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘அன்பே சிவம்’ திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் இந்தப் படத்தைப் பற்றிய செய்தி, ரஜினியின் சமீபத்திய படமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version