சினிமா

DNA டெஸ்ட் தேவை.?திருமணம் மிரட்டி நடந்தது;நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கல! ரங்கராஜ் பல்டி

Published

on

DNA டெஸ்ட் தேவை.?திருமணம் மிரட்டி நடந்தது;நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கல! ரங்கராஜ் பல்டி

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜை காதலித்து திருமணம் செய்தார். ஆனால்  அதற்குப் பிறகு மாதம்பட்டி தன்னை ஏமாற்றியதாக புகார் கொடுத்தார். இவர்கள் இருவரும்  கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்ததாகவும், இந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு முறை ஜாய் கிரிஸில்டா  கர்ப்பம் ஆனதாகவும் தெரிவித்தார்.ஆனால் அதற்கு ரங்கராஜ் மறுப்பு தெரிவிக்கவே அவற்றை கலைத்ததாகவும் தெரிவித்தார் ஜாய். மேலும் இறுதியாக  கருத்தரித்த போது இதனையும்  கலைத்தால் உயிருக்கு ஆபத்து என்று டாக்டர்கள் எச்சரித்ததாலே அவர் அதனை பிரசவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பிலான வழக்கு விசாரணை ஒரு பக்கம் இருக்க, கடந்த  மாதம் 31ஆம் தேதி ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ராகா ரங்கராஜ் என்று  பெயர் வைத்து  சர்டிபிகேட்டையும் பெற்றார் ஜாய் கிரிஸில்டா.மேலும்  நேற்றைய தினம் மாதம்பட்டி  ரங்கராஜ்  நான் தான் குழந்தைக்கு அப்பா என்பதை மகளிர் காவலர் ஆணையத்தில்  ஒப்புக்கொண்டார். இதனால் டிஎன்ஏ டெஸ்ட் தேவை இல்லை என்று கூறியதாகவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் படுவைரலானது. இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது இன்ஸ்டா  பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்  மகளிர் ஆணையத்தில் குறிப்பிட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை  என்று அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  அதன்படி அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு, நான் ஜாய்யை தன்னிச்சையாக (under free will) திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது. செப்டம்பர் 2025 இல், ஆயிரம் விளக்குகள், மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கனவே அளித்துள்ளேன்,இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ. 1,50,000/- பராமரிப்புத் தொகையாகவும், தனது BMW காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI-யையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார்,நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன். நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால்(DNA Test),அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது.மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version