இலங்கை

திருகோணமலை நகரில் சுற்றி திரியும் கட்டாக்காலி மாடுகள் ; பொதுமக்கள் விசனம்

Published

on

திருகோணமலை நகரில் சுற்றி திரியும் கட்டாக்காலி மாடுகள் ; பொதுமக்கள் விசனம்

திருகோணமலை நகரில் உள்ள வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் வீதியால் பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

காலை நேரங்களில் வேலைக்குச் செல்கின்றவர்களும், பாடசாலைக்கு அவசர அவசரமாக செல்கின்ற மாணவர்களும் வீதிகளில் செல்கின்ற கட்டாக்காலி மாடுகளினாலும் அவை வீதியில் போடுகின்ற சாணத்தினாலும் விபத்துகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.

Advertisement

எனவே குறித்த கட்டாக்காலி மாடுகள் தொடர்பில் மாநகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று கட்டாக்காலி மாடுகள் பிடித்தல் தொடர்பான அறிவித்தலை மாநகரசபையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக முதல்வர் விடுத்திருந்தார்.

அதில் மாநகர எல்லைக்குள் கட்டாகாலி மாடுகள் பொது இடங்களில் நடமாடுவது அதிகரித்த வண்ணம் உள்ளது மற்றும் மக்கள் பாதுகாப்பிற்கும் போக்குவரத்திற்கும் பெரும் இடையூறாகிறது.

Advertisement

இதனால், மாநகர சபை சார்பில் இத்தகைய மாடுகள் பிடிக்கப்படுவதுடன், சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பிடிக்கப்பட்ட மாடுகளை உரிய உரிமையாளர்கள் மூன்று (03) நாட்களுக்குள் வந்து மீட்டுக் கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் மாடுகளை மீளப் பெறாவிட்டால், அவை மாநகர சபைக்கு சொந்தமாக்கப்படும்.

மாடுகளை மீண்டும் பெற விரும்பும் உரிமையாளர்கள், உரிய அத்தாட்சிப் பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும், மேலும் மாநகர சபையில் நிர்ணயிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்திய பின்னரே மாடுகளை மீண்டும் பெற இயலும்.

Advertisement

இனி வரும் காலங்களில் தண்டப்பணத் தொகை மேலும் அதிகரிக்கப்படுமென பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version