உலகம்
அமெரிக்க அரசாங்கத்தின் பணி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள சிக்கல் – முடங்கும் விமான நிலையங்கள்!
அமெரிக்க அரசாங்கத்தின் பணி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள சிக்கல் – முடங்கும் விமான நிலையங்கள்!
அமெரிக்க அரசாங்கத்தின் பணிநிறுத்தம் தொடர்ந்தால் வரும் வெள்ளிக்கிழமை முதல் 40 முக்கிய விமான நிலையங்களில் விமான நிறுத்தம், மற்றும் தாமதம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விமானப் பயணத் திறனில் 10% குறைப்பு ஏற்படும் என்று போக்குவரத்துச் செயலாளர் சீன் டஃபி எச்சரித்தார்.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சோர்வு தொடர்பான பிரச்சினைகளைப் புகாரளித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பணிநிறுத்தம் அசாதாரணமானது, எங்கள் கட்டுப்பாட்டாளர்களுக்கு ஒரு மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பது அசாதாரணமானது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட பணிநிறுத்தத்தின் போது, கட்டுப்பாட்டாளர்கள் ஊதியம் இல்லாமல் தொடர்ந்து பணியாற்ற வேண்டியிருந்தமையால் பலர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் எஞ்சியவர்கள் கூடுதல் நேரம் வேலைசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,
லங்கா4 (Lanka4)
அனுசரணை