சினிமா

இந்தியாவில் ரீ-ரிலீஸில் வசூல் வேட்டை ஆடிய படங்கள்!! ஒரேவொரு தமிழ் படம் தான்

Published

on

இந்தியாவில் ரீ-ரிலீஸில் வசூல் வேட்டை ஆடிய படங்கள்!! ஒரேவொரு தமிழ் படம் தான்

இந்திய சினிமாவில் தற்போது பல வருடங்களுக்கு முன் ரிலீஸான படங்கள் இப்போதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வரும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அப்படி இந்திய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு அதிக வசூல் செய்தது என்னென்ன படங்கள் என்று பார்ப்போம்.2018ல் ஹாரர், திரில்லர், மிஸ்ட்ரி திரைப்படமாக ரிலீஸான Tumbbad படம் ரீ-ரிலீஸின் போது சுமார் ரூ. 38 கோடி வசூலித்து சாதனை படைத்தது.2016ல் ரொமாண்டிக் திரைப்படமாக வெளியான ‘Sanam Teri Kasam’என்ற இந்தி படம் ரீரிலீஸ் செய்யப்பட்டு சுமார் 36 கோடி ரூபாய் வசூலித்து அசத்தியது.நடிகர் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் 2004ல் வெளியான கில்லி படம் ரீரிலீஸ் செய்யப்பட்டு சுமார் ரூ. 27 கோடி வசூலித்து சாதனை படைத்தது.2013ல் ரன்பீர் கபூர், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான Yeh Jawaani Hai Deewani என்ற இந்தி படம் ரீரிலீஸின் போது சுமார் ரூ. 26 கோடி வசூலித்திருக்கிறது.ஹாலிவுட் படமான Interstellar இந்தியாவில் ரீரிலீஸ் செய்யப்பட்டபோது சுமார் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறதாம்.1997ல் Titanic படம் உலகம் முழுவதும் வெளியாகி பல கோடி ஆயிரம் வசூலை ஈட்டியது. அப்படம் வெளியாகி 25 ஆண்டுகளான நிலையில் இந்தியாவில் 3டி மூலம் 2023ல் ரீரிலீஸ் செய்யப்பட்டு சுமார் ரூ. 18 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது.1975ல் அமிதாப் பச்சன் நடிப்பில் ஆக்‌ஷன்ம் அட்வென்ச்சர், காமெடி, கிரைம் கதைக்களத்துடன் உருவாகி வெளியான Sholay படம் ரூ. 15 கோடி வசூலித்தது.இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் இரு பாகங்களாக உருவான பாகுபலி படத்தினை ஒரே படமாக பாகுபலி : தி எபிக் என்ற பெயரில் சமீபத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்ட முதல் நாளில் மட்டுமே சுமார் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது.5 நாட்களில் ரூ. 28 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து கலெக்ஷன் வேட்டையாடியது. இப்படம் தான் இந்தியாவில் ரீரிலீஸின் பாக்ஸ் ஆபிஸில் டாப் 3 வது இடத்தில் இருக்கிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version