விளையாட்டு

என்னா அடி… அதிர்ந்து போன ஆடம் ஜாம்பா; துபே விளாசியதில் தொலைந்து போன பந்து!

Published

on

என்னா அடி… அதிர்ந்து போன ஆடம் ஜாம்பா; துபே விளாசியதில் தொலைந்து போன பந்து!

India vs Australia Live Score, 4th T20I: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் கான்பெராவில் நடந்த முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹோபார்ட்டில் நடந்த 3-வது போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் தற்போது தொடர் 1-1 என சமனில் உள்ளது.  இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடியில், 21 ரன்னில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். தற்போது சுப்மன் கில் – சிவம் துபே ஜோடி களத்தில் சிறப்பாக மட்டையைச் சுழற்றி ஆடி வருகிறார்கள். 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு இந்தியா 75 ரன்கள் எடுத்துள்ளது. New ball please! Shivam Dube sent that one way out of the stadium 👀#AUSvINDpic.twitter.com/H5px77NuIaஇந்நிலையில், 11-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா வீசினார். அவர் போட்ட 2-வது பந்தை ஸ்ட்ரைட் திசையில் முட்டியை மடக்கி சிக்ஸர் பறக்கவிட்டார் சிவம் துபே. அவர் அடித்த பந்து அத்தோடு தொலைந்து போனது. ஆஸ்திரேலிய மண்ணில் ஐ.பி.எல் ஆடுவது போல் வெளுத்து இருக்கிறார் துபே. அவர் 18 பந்துகளில் 1பவுண்டரி, 1 சிக்சருடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். துபே சிக்ஸர் பறக்க விட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. 117m six by Shivam Dube 😮😮 pic.twitter.com/SqurxXVQKi

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version