பொழுதுபோக்கு

‘என்.ஐ.சி.யு-ல இருக்கும் குழந்தையின் கண்ணீரும் சாபமும் ரங்கராஜை சும்மா விடாது’: ஜாய் கிறிஸில்டா ஆவேச வீடியோ

Published

on

‘என்.ஐ.சி.யு-ல இருக்கும் குழந்தையின் கண்ணீரும் சாபமும் ரங்கராஜை சும்மா விடாது’: ஜாய் கிறிஸில்டா ஆவேச வீடியோ

நடிகர் மற்றும் சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜுக்கும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டாவுக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் திருமணச் சர்ச்சை, கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் பேசுபொருளாக உள்ளது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த ஜாய் கிறிஸில்டா, ரங்கராஜுக்கு எதிராக ஆவேசமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.ஜாய் கிறிஸில்டா வெளியிட்ட வீடியோவில், தனது கணவர் என்று அவர் குறிப்பிடும் ரங்கராஜ், மகளிர் ஆணையத்தின் முன்பு பேசியதற்கும், வெளியே வெளியிடும் கருத்துகளுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாகக் குற்றம் சாட்டினார். மகளிர் ஆணையத்தில் நடந்த விசாரணையின்போது, ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்துகொண்டதை ஒப்புக்கொண்டதாகவும், “இது என் குழந்தைதான், எனக்கு டிஎன்ஏ டெஸ்ட் வேண்டாம்” என்று தனது வாயாலேயே சொன்னதாகவும் ஜாய் கிறிஸில்டா குறிப்பிட்டார்.ஆனால், வெளியே ரங்கராஜ் வேறுவிதமான கருத்துகளைப் பரப்பி வருவதாகவும், தனது குடும்ப உறுப்பினர்கள் இது ரங்கராஜின் குழந்தை இல்லை என்று வதந்திகளைப் பரப்புவதாகவும் ஜாய் குற்றம் சாட்டினார். “பிளாக்மெயில் பண்ணிதான் கல்யாணம் பண்ணேன்” என்று ரங்கராஜ் கூறுவதைச் சுட்டிக்காட்டி, “ஒரு பொண்ணு பிளாக்மெயில் பண்ணா, நீ 15 பொண்ணுங்களையும் கல்யாணம் பண்ணிடுவியா?” என்று கேள்வி எழுப்பினார்.தனக்கும் ரங்கராஜுக்கும் இடையே நடந்த “லவ் யூ பொண்டாட்டி,” “மிஸ் யூ” போன்ற அத்தனை சாட் உரையாடல்களும் இருப்பதாகவும், “1000 போட்டோஸ்” இருப்பதாகவும், அதில் ரங்கராஜ் சந்தோஷமாகப் சிரித்திருப்பதாகவும், அவை பிளாக்மெயில் மூலம் எடுக்கப்பட்டதா என்றும் சவால் விடுத்தார். ரங்கராஜ், குடும்ப உறுப்பினர்களால்தான் தான் இவ்வாறு நடந்துகொள்வதாகவும்,  “பிசினஸ் கெட்டுப்போகும்” என்பதால்தான் இப்படி செய்வதாகவும் இன்வெஸ்டிகேஷன் அறையில் பேசியதாகக் குறிப்பிட்டார்.இறுதியாக, “உன் குழந்தை என்.ஐ.சி உள்ள வந்து கஷ்டப்பட்டுட்டு இருக்குது. ஆனா, நீ அந்த குழந்தையை கொச்சப்படுத்தி வெளிய ஸ்டேட்மெண்ட் போட்டுட்டு இருக்க. உனக்கெல்லாம் அந்த குழந்தையோட சாபமும் கண்ணீரும் உன்னை சும்மா விடும்னு நினைக்கிறியா” என்றும் “விடவே விடாது” என்றும் ஆவேசமாகப் பேசினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version