சினிமா

கல்யாண வீட்டில் இப்படி ஒரு சோகமா?.. பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்ட துல்கர் சல்மான்!

Published

on

கல்யாண வீட்டில் இப்படி ஒரு சோகமா?.. பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்ட துல்கர் சல்மான்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் துல்கர் சல்மான். மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ், தெலுங்கு என தொடர்ந்து மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் லக்கி பாஸ்கர். தற்போது, இவர் தெலுங்கு இயக்குநர் பவன் சாதினேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.இந்த படத்திற்கு ‘ஆகாசமோல் ஓகா தாரா’ என பெயரிடப்பட்டுள்ளது. துல்கர் கேரளாவை சேர்ந்த ஒரு பிரியாணி அரசி நிறுவனத்திற்கு விளம்பர தூதராக உள்ளார்.இந்நிலையில், பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு கேட்டரிங் நிறுவனம் சார்பில் நுகர்வோர் ஆணையத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.அதாவது, கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக பிரசித்தி பெற்ற ஒரு நிறுவனத்தின் பிரியாணி அரிசி வாங்கப்பட்டுள்ளது. அதில் சமைத்த பிரியாணியை சாப்பிட்ட பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.இதை தொடர்ந்து இந்த அரிசி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர தூதரான நடிகர் துல்கர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரிசி நிறுவனத்தின் உரிமையாளர், நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.     

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version