சினிமா

“காந்தா” பட ட்ரெய்லரால் எக்ஸைட்டான சிம்பு… துல்கர்- STR-க்கு இடையே இப்புடி ஒரு நட்பா.?

Published

on

“காந்தா” பட ட்ரெய்லரால் எக்ஸைட்டான சிம்பு… துல்கர்- STR-க்கு இடையே இப்புடி ஒரு நட்பா.?

தென்னிந்திய திரைப்பட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ‘காந்தா’ திரைப்படத்தின் ட்ரெயிலரை பிரபல நடிகர் சிலம்பரசன் இன்று வெளியிட்டு, நடிகர் துல்கர் சல்மான் மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ட்ரெயிலர் வெளியான சில மணி நேரங்களுக்குள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மலையாள சினிமாவின் முத்திரையிட்ட நட்சத்திரம் துல்கர் சல்மான், கடந்த ஒரு தசாப்தத்தில் தன்னுடைய அபாரமான நடிப்புத் திறமையால் இந்திய சினிமா ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்திருந்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய நான்கு முக்கிய மொழிகளில் தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை வழங்கி வரும் துல்கர், தற்போது ‘காந்தா’ (Kaantha) எனும் பன்மொழி படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறையில் புதிய முயற்சியுடன் களம் இறங்கியுள்ளார்.இந்நிலையில், சிலம்பரசனின் இந்த வாழ்த்து துல்கரின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன்மூலம், இருவருக்கும் திரைத்துறையில் பரஸ்பர மரியாதை இருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன், இப்படம் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version