சினிமா
கேஜிஎஃப் பட நடிகர் ஹரிஷ் ராய் உயிரிழப்பு!! சோகத்தில் ரசிகர்கள்..
கேஜிஎஃப் பட நடிகர் ஹரிஷ் ராய் உயிரிழப்பு!! சோகத்தில் ரசிகர்கள்..
கன்னட சினிமாவை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்ற படமாக அமைந்தது தான் கேஜிஎஃப் படம். நடிகர் யஷ் ஹீரோவாக நடித்து வெளியான இப்படத்தின் 2 பாகங்களும் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்ததோடு ஆயிரம் கோடிக்கும் மேலான வசூலையும் ஈட்டியது.இப்படத்தில் ராக்கி பாயுடன் பயணிக்கும் சச்சா என்ற முக்கிய ரோலில் நடிகர் ஹரிஷ் ராய் நடித்திருப்பார். பல படங்களில் நடித்துள்ள ஹரிஷ் ராய், அடிக்கடி மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்டு தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக புற்றுநோய் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிக்கைக்கு பணம் இலலாததால், பெங்களூருவில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனையில் அவருக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், நடிகர் ஹரிஷ் ராய் கீமோதெரபி சிகிச்சையும் தொடர்ந்து செய்து கொண்டார்.புதிய சிகிச்சை முறைகள் சிலவற்றை அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்த நிலையில், அந்த சிகிச்சைக்கான செலவும் அதிகம் என்றாலும் தொடர்ந்து செய்து வந்தார். ஒரு மாதத்திற்கு மட்டும் இந்த சிகிச்சைக்கு 3 லட்சம் ரூபாய் செலவு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.சமீபத்தில் கோபி கவுத்ரு, உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகரை சந்தித்து, ஹரிஷ் ராய் நிதி உதவி கேட்டு வேண்டுகோள் விடுத்த காணொளியை ஆன்லைனில் பகிர்ந்து கொண்டார். உடல்நிலை மேம்பட்டால் மீண்டும் நடிப்புக்குத் திரும்ப விருப்பம் என்று தெரிவித்தவர், தனது சிகிச்சைக்கான பெரும் செலவை வெளிப்படுத்தினார்.ஒரு ஊசிக்கு மட்டும் ரூ. 3 லட்சம் செலவாகும், ரூ. 10.5 லட்சம் தேவை என்றும் ராய் கூறினார். தைராய்டு புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஹரிஷ் ராய், பெங்களூருவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.