பொழுதுபோக்கு

சண்டைப்போட்டு கூச்சலிடும் கண்டெஸ்டண்ட்… வைல்ட் கார்டில் உள்ளே வந்த பிக்பாஸ்!

Published

on

சண்டைப்போட்டு கூச்சலிடும் கண்டெஸ்டண்ட்… வைல்ட் கார்டில் உள்ளே வந்த பிக்பாஸ்!

உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ரியாலிட்டி ஷோ, பிக்பாஸ்! இந்நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய பலமே திரைக்குப் பின்னால் இருந்து வரும் கம்பீரமான அந்தக் குரல் தான். “பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் அனைவரும்…” என்று ஆணை பிறப்பிக்கும் அந்தக் குரலைக் கேட்டாலே போட்டியாளர்கள் முதல் ரசிகர்கள் வரை ஒருவித பரபரப்பு தொற்றிக் கொள்ளும். அப்படிப்பட்ட மகத்துவமிக்க, “பிக்பாஸின் குரல்” கொடுத்த ஒருவரே, தற்போது தமிழ் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் போட்டியாளராக களம் இறங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ், தமிழில் தற்போது 9வது சீசனை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் 20 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த சீசனில், ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாத பல போட்டியாளர்கள் சண்டையிடுவதையே முழு நேர வேலையாகச் செய்து வருவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர். வாரந்தோறும் தொகுப்பாளர் விஜய் சேதுபதி அறிவுரை வழங்கினாலும், ஆட்டம் திசைமாறியே சென்றது. அதனால், 50 நாட்களை நெருங்கும் வேளையில், நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்க ஒரு அதிரடி முடிவை எடுத்தது பிக்பாஸ் நிர்வாகம். ஆம்! கடந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரி நிகழ்ந்தது. ஆட்டத்தின் போக்கை மாற்றும் விதமாக, அமித் பார்கவ், சாண்ட்ரா, பிரஜன், திவ்யா கணேஷ் போன்ற பிரபலங்கள் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக உள்ளே சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, டாஸ்க்கின் ஒரு பகுதியாக மஞ்சரி, தீபக், பிரியங்கா தேஷ்பாண்டே போன்றோர் விருந்தினர்களாக வந்தபோது, வீட்டிற்குள் பல புதிய மாற்றங்கள் நிகழத் தொடங்கின. இதனால், ஆட்டம் இனி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த ஒன்பதாவது சீசனின் வைல்ட் கார்ட் போட்டியாளர்களில் ஒருவர்தான், முன்பு பிக்பாஸின் குரலுக்குச் சொந்தக்காரர்! வேறு யாருமில்லை, அவர் தான் நடிகர் அமித் பார்கவ். அமித் பார்கவ், கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்தவர் என்பது பலரும் அறியாத ஒரு சுவாரஸ்யமான தகவல். இவர் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான முகம். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொடரில் நடிகை பிரியா பவானி சங்கருக்கு ஜோடியாக நடித்துப் பிரபலமானார்.சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அமித் பார்கவ், தற்போது பிக்பாஸ் சீசன் 9ன் வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார். திரைக்குப் பின்னால் இருந்து ஆட்டிப் படைத்தவர், இப்போது திரைக்கு முன்னே வந்து ஆட்டத்தை எப்படி மாற்றப் போகிறார்? என்பதே ரசிகர்களின் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version