சினிமா

சுகன்யா அம்மா வார்த்தையால் சோகத்தில் ராஜி… மீண்டும் அரசி கிட்ட வம்பிழுக்கும் குமார்.!

Published

on

சுகன்யா அம்மா வார்த்தையால் சோகத்தில் ராஜி… மீண்டும் அரசி கிட்ட வம்பிழுக்கும் குமார்.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மயிலோட அம்மா பாண்டியன் வீட்ட போய் அரசியைப் பார்த்து உன்ர கல்யாணம் குழப்பம் இல்லாமல் இருந்திருந்தால் இந்த முறை தல தீபாவளி கொண்டாடி இருப்ப என்கிறார். அதைக் கேட்ட உடனே அரசின்ர முகம் மாறுது… பின் பாண்டியன் அரசி படிச்சு முடிச்சு வேலைக்கு போன பிறகு கல்யாணம் செய்து அதுக்கப்புறம் தல தீபாவளி கொண்டாடினால் போச்சு என்கிறார்.அதனை அடுத்து பாண்டியன் சரவணனுக்கு போன் எடுத்து உன்ர மாமா தீபாவளி சீர் கொண்டு வந்திருக்கிறார் வீட்ட வா என்கிறார். அதுக்கு சரவணன் எனக்கு கடையில வேலை இருக்கு என்கிறார். அதனைத் தொடர்ந்து மயில் அம்மாவைக் கூப்பிட்டு கடை காசில அப்பா சீர் வாங்கிட்டு வந்திருக்கிறார் எப்ப மாட்டுப்படுறோமோ தெரியா என்கிறார்.அதுக்கு மயில் அப்பா அதெல்லாம் நான் கொடுத்திடுவேன் என்கிறார். அதனை அடுத்து குமார் அரசியை ரோட்டில பார்த்து ஹாப்பி தீபாவளி என்கிறார். அதைக் கேட்ட அரசி கோபத்தில் அங்கிருந்து போறார். பின் அரசி உண்மையா திருந்தினவங்க தான் விலகி போற பொண்ணுகிட்ட வந்து கதைப்பாங்களா என்று கேட்கிறார். அந்த நேரம் பார்த்து அங்க சரவணன் வந்து நிக்கிறார். அதைப் பார்த்த அரசியும் குமாரும் ஷாக் ஆகுறார்கள். பின் சரவணன் குமாரைப் பேசுறார். அதனை அடுத்து சுகன்யாவோட அப்பா, அம்மா பாண்டியன் வீட்ட தீபாவளி சீர் கொண்டு போறார்கள். பின் அங்கிருந்த ராஜி கிட்ட உனக்கு தீபாவளி சீர் வந்ததா என்று கேட்க ராஜி கவலையோடு இல்ல என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version