இலங்கை

சுட்டுக்கொல்லப்பட்ட பிரதேச சபை தவிசாளர் இடத்திற்கு புதியவர்

Published

on

சுட்டுக்கொல்லப்பட்ட பிரதேச சபை தவிசாளர் இடத்திற்கு புதியவர்

மாத்தறை, வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் எதிர்வரும் 28ஆம் திகதி தெரிவு செய்யப்படுவார் என அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தென் பிராந்திய உள்ளூராட்சி சபைக்கான ஆணையாளர் நாயகம் இந்த வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளார்.

Advertisement

அதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு பிரதேச சபையில் இது தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர அண்மையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததை அடுத்து குறித்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே, குறித்த பதவிக்கு புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version