பொழுதுபோக்கு
ஜூனியர் நடிகர் டூ கிரிக்கெட் வீரர்; தினமும் ரூ600 சம்பளம் வாங்கிய ஸ்டாருக்கு இப்போ தினமும் 300 டாலர் உதவித்தொகை!
ஜூனியர் நடிகர் டூ கிரிக்கெட் வீரர்; தினமும் ரூ600 சம்பளம் வாங்கிய ஸ்டாருக்கு இப்போ தினமும் 300 டாலர் உதவித்தொகை!
கிரிக்கெட் போட்டியை விரும்பி பார்க்கும் அனைவருக்கும் வருண் சக்ரவர்த்தி என்பது ஒரு பரிச்சயமான பெயர்தான். சமீபததிய ஆண்டுகளில் இநதிய கிரிக்கெட் அணி கண்டுபிடித்த குறிப்பிடத்தக்க சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். இருப்பினும், அவரது தொழில் பாதை அவ்வளவு எளிதானது அல்ல; அவரது 20-களில், அவர் கட்டிடக்கலை (architecture), இசை, திரைப்படங்கள் மற்றும் கிரிக்கெட் என்று பல துறைகளுக்கு இடையில் பயணித்து, இறுதியில் விளையாட்டில் தனது இடத்தை நிலைநிறுத்தினார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்ரவிச்சந்திரன் அஷ்வினுடனான ‘குட்டி ஸ்டோரீஸ் வித் ஆஷ்’ (Kutti Stories with Ash) என்ற பாட்காஸ்டில் பேசிய வருண், கிரிக்கெட்டுக்கு முந்தைய தனது வாழ்க்கை மற்றும் திரைப்படத் துறையில் அவர் இருந்த குறுகிய காலம் பற்றிப் பேசினார். இதில், 25 வயதில் திரைப்படத் துறையில் முயற்சி செய்த காலத்தைப் பற்றி பேசிய வருண் “நான் என் குழுவில் இருந்த சினிமா நண்பர்களுடன் பழக ஆரம்பித்தேன். நாங்கள் திரைப்பட ஷூட்டிங்குகளைப் பார்ப்போம். ஒருநாள், ‘ஜீவா’ என்ற கிரிக்கெட் திரைப்படம் பல கிரிக்கெட் மைதானங்களில் படமாக்கப்படுவதை அறிந்தேன். எனவே, நான் உதவி இயக்குநராக முயற்சி செய்யலாம் என்று நினைத்து ஷூட்டிங் இடத்திற்குச் சென்றேன். ‘வாரணம் ஆயிரம்’ மற்றும் ‘சுப்ரமணியபுரம்’ போன்ற சில படங்களைப் பார்த்திருந்தேன். அந்த நாட்களில் அவை என்னை மிகவும் ஊக்கப்படுத்தின. எனவே, திரைப்படங்கள் மூலம் என்னால் என்னை வெளிப்படுத்த முடியும் என்று உணர்ந்தேன்.ஆனால், நான் செட்டில் உதவி இயக்குநராக ஆக முடியவில்லை. ஒருநாள் செட்டில் ஒரு உதவி இயக்குநர் என்னிடம் வந்து, எனக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமா என்று கேட்டு, ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக (சிறு கதாபாத்திரத்தில் நடிப்பவர்) நடிக்க வாய்ப்பளித்தார். நானும் ‘சரி, வருகிறேன்’ என்றேன். ஒரு நாளுக்கான சம்பளம் ரூ. 600. அந்தக் காலத்தில் அது மிகவும் உதவியாக இருந்தது.” என்று வருண் கூறினார். அப்போது ரவிச்சந்திரன் அஷ்வின், தற்போது ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக அவரது தினசரி அலவன்ஸ் எவ்வளவு என்று வருண் சக்ரவர்த்தியிடம் கேட்க, அவர் பணிவுடன், “இப்போது அது கிட்டத்தட்ட 300 அமெரிக்க டாலர்கள்” என்று பதிலளித்தார். திரைப்பட செட்டில் அவர் இருந்த காலம் குறுகியதாக இருக்கலாம், ஆனால் அது கதை சொல்வது (storytelling) மீதான அவரது ஆர்வத்தைத் தூண்டியது.அந்தப் படத்தின் படப்பிடிப்பு 20 நாட்கள் நடந்தது, ஒரு திரைப்படத்தை உருவாக்கும் செயல்முறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் நான் கதைகள் மற்றும் ஸ்கிரிப்டுகள் எழுத ஆரம்பித்தேன். அந்த ஸ்கிரிப்டுகளை பலரிடம் எடுத்துச் சென்று வாய்ப்பு கேட்டேன், ஆனால் அவர்கள் என்னிடம், ‘உங்களால் உணர்ச்சிகளை (emotions) நன்றாக எழுத முடிகிறது, ஆனால் அதை உங்கள் கதை சொல்லல் (narration) மற்றும் இயக்கத்தில் (direction) கொண்டு வர முடியவில்லை’ என்று கூறினார்கள்.நான் அந்தக் காலத்தில் பல குறும்படங்கள் (short films) செய்திருந்தேன். அவை சரியாக அமையவில்லை. நல்லவேளையாக, அவை அனைத்தும் இப்போது யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன. அதன் பிறகு, இது எனக்கு வேலைக்கு ஆகாது என்று உணர்ந்து, திரைப்படங்களில் முயற்சி செய்வதை நிறுத்தினேன். அதன்பிறகு நான் சென்னையின் பல மைதானங்களில் டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அங்கே, போட்டிகளில் விளையாட எனக்குப் பணம் கிடைக்க ஆரம்பித்தது, மெதுவாக முன்னேறினேன்,” என்று வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.