இலங்கை
தன் மீது மோதிய காரை 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்ற புகையிரதம்
தன் மீது மோதிய காரை 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்ற புகையிரதம்
களனிக்கும் வனவாசலவுக்கும் இடையிலான புகையிரதத்தில் மோதிய கார் 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் கடவையில் கார் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி சென்ற ரயிலுடனே குறித்த கார் நேற்று (5) மோதியுள்ளது.
குறித்த விபத்து காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது .