சினிமா
திருமண சர்ச்சையில் அதிரடி திருப்பம்… புதிய மனுவை தாக்கல் செய்த ஜாய் கிரிஸில்டா.!
திருமண சர்ச்சையில் அதிரடி திருப்பம்… புதிய மனுவை தாக்கல் செய்த ஜாய் கிரிஸில்டா.!
தமிழ் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்ட ஜாய் கிரிஸில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இடையிலான திருமண விவகாரம் தற்போது புதிய திருப்பத்தை பெற்றுள்ளது. தங்களுடைய தனிப்பட்ட விவகாரங்களை திடீரென வெளியே கொண்டு வந்து, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தீவிர விவாதங்களை ஏற்படுத்தி வரும் இந்த ஜோடி, கடந்த சில வாரங்களாக அதிக கவனம் பெற்றுள்ளனர்.பிரச்சனையின் ஆரம்ப கட்டத்தில், ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியுள்ளார் என்று கூறியிருந்தார். அதன்பிறகு, மாதம்பட்டி ரங்கராஜ் மீண்டும் ஜாய்க்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கிரிஸில்டா பிளாக்மெயில் செய்து தான் திருமணம் செய்தார் என்று புகார் அளித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையேயான உறவு மிகவும் கசப்பான மற்றும் பதட்டமானதாக மாறியுள்ளது.சமீபத்தில், ஜாய் கிரிஸில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததை அடுத்து, சமூக வலைத்தளங்களில் பரபரப்பான விமர்சனங்கள் தொடர்ந்து வருகின்றன. குழந்தையின் பிறப்புக்குப் பிறகும், இரண்டு தரப்புகளுக்கும் இடையிலான தகராறுகள் குறையாமல் தொடர்ந்தன.இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா தற்போது காவல் துறையின் விசாரணை திருப்தியை அளிக்கவில்லை என்றும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.மேலும், இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும், நீதி மன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.