இலங்கை
தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீப்பரவல்
தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீப்பரவல்
கண்டி பல்லேகலையில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையில் நேற்று இரவு திடீரென தீ பரவி தொழிற்சாலை முழுவதும் பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலை முழுவதும் பற்றி எரிந்ததில் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் உருவாகியது.
பற்றி எரிந்த தீயைக் கட்டுப்படுத்த கண்டி தீயணைப்புப் படையின் 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தில் உயிர் சேதங்கள் ஏதேனும் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகவில்லை.
எனினும் தொழிற்சாலை முழுவதும் பற்றி எரிந்துள்ளதால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அவதானிக்க முடிகின்றது.
தீ விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.