பொழுதுபோக்கு
படத்தில் என் கேரக்டரை விட, உடல் எடை பற்றிய கேள்வி முக்கியமா? சர்ச்சை கேள்வி கேட்ட நிரூபருக்கு கௌரி கிஷான் பதிலடி!
படத்தில் என் கேரக்டரை விட, உடல் எடை பற்றிய கேள்வி முக்கியமா? சர்ச்சை கேள்வி கேட்ட நிரூபருக்கு கௌரி கிஷான் பதிலடி!
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் தனது உடல் எடை எவ்வளவு என்று அநாகரீகமான கேள்வியைக் கேட்ட பத்திரிகையாளருக்கு நடிகை கௌரி கிஷன் பதிலடி கொடுத்து பேசியதால் இருவருக்கும இடையே வாக்குவாதம் ஏறபட்ட நிலையில், இந்த வீடியோ சமூகவலைதளங்களில வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் த்ரிஷாவின் இளம் வயது ஜானு கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கௌரி கிஷன். அதன்பிறகு விஜயின் மாஸ்டர், தனுஷின் கர்ணன், ஜி.வி.பிரகாஷின் அடியே, உலகம்மை, ஹாட்ஸ்பாட், போட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தற்போது இவர் அதர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். அபின் ஹரிகரன் இயக்கி நாயகனாக நடித்துள்ள இந்த படம் நவம்பர் 7-ந் தேதி வெளியாக உள்ளது.இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், இதில், கலந்துகொண்டபோது, பத்திரிகையாளர் ஒருவர் நடிகை கௌரி கிஷனைத் தூக்கினீர்களே அவர் உடலின் எடை எவ்வளவு? என்று நாயகனிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது இந்த கேள்வி பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், இன்று நடைபெற்ற படத்தின் சிறப்பு திரையிடலுக்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்த கேள்வி பூதாகரமாக வெடித்துள்ளது. படத்தின் பத்திரிக்கையாளர் சந்தப்பில், தனது உடல் எடை எவ்வளவு என்று கேட்ட அந்த பத்திரிகையாளரிடம் கௌரி கிஷன், “என் உடல் எடையைத் தெரிந்துவைத்து என்ன செய்யப்போகிறீர்கள்? ஒருவரை உடல்ரீதியாக அவமானப்படுத்துவது எல்லாம் கேள்வியா? நான் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். அதைக் குறித்து கேளுங்கள். நீங்கள் கேட்டது உருவ கேலி செய்வது போன்றது என்ற கூறினார். இதை கேட்ட அந்த பத்திரிக்கையாளர், அன்று கேட்ட கேள்வியை இன்று கேட்கிறீர்கள். நான வழக்கமாக கேட்பதை தான் கேட்டேன் தப்பாக எதுவும் கேட்கவில்லை. உங்களை தூக்கினார். கடினமாக இருந்ததா? என்பதற்காக தான் கேட்டேன். இன்டரஸ்டிங்கான கேள்வி இது. உங்களக்கு தமிழ் புரியவில்லை. நீங்க பூசனதுபோல் இருந்தீர்கள். அதனால், கேட்டேன். தமிழ் சினிமாவில் இப்படித்தான் கேள்விகள் இருக்கும். உங்களிடம் மோடியைப் பற்றியா கேக்க முடியும்? குஷ்பு, சரிதா என எல்லாரும் இக்கேள்வியை எதிர்கொண்டவர்கள் தான் என்று அந்த பத்திரிக்கையாளர் சொல்ல, இதை கேட்ட கௌரி கிஷன், நீங்கள் என் எடையை பற்றி கேட்டது எனக்கு பிடிக்கவில்லை. படத்தில் எனது கேரக்டரை பற்றி கேட்காமல், என் எடையை தெரிந்துகொள்வது அவ்வளவு முக்கியமா என்று கேள்வி எழுப்பினார்.மேலும், இங்கு நான் மட்டுமே பெண். என்னைச் சுற்றி இவ்வளவு ஆண்கள் இருக்கிறீர்கள். இப்படி உடல்தோற்றத்தை அவமானப்படுத்துவத்தை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு நடிகையின் உடல் எடையைத் தெரிந்துகொள்வது அநாகரீகமானதுதான். இது கேள்வியும் இல்லை நீங்க பத்திரிகையாளரும் இல்லை. உங்கள் துறைக்கு அவமானத்தைக் கொடுக்கிறீர்கள்” என பேசினார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்ததால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.