பொழுதுபோக்கு

பள்ளியில் 3-வது மொழி, மலையாளத்தை விட தமிழ் நல்லா பேசுவேன்; ‘காந்தா’ பட விழாவில் பலரையும் கவர்ந்த துல்கர் சல்மான் பேச்சு!

Published

on

பள்ளியில் 3-வது மொழி, மலையாளத்தை விட தமிழ் நல்லா பேசுவேன்; ‘காந்தா’ பட விழாவில் பலரையும் கவர்ந்த துல்கர் சல்மான் பேச்சு!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும் தென்னந்திய சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பாளராகவும் வெற்றிக்கொடியை நாட்டியுள்ள நிலையில், அடுத்து இவர் நடிப்பில் காந்தா என்ற படம் வெளியாக உள்ளது. நாக் அஸ்வின் இயக்கிய ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தில் ஜெமினி கணேசன் வேடத்தில் நடித்திருந்த துல்கர் சல்மான், தற்போது மீண்டும் பழைய தமிழ்த் சினிமாவின் பொற்காலத்தை மீட்டெடுக்கும் ஒரு கதைக்களத்தில் நடித்துள்ளார்.’காந்தா’ என்ற இந்த புதிய திரைப்படம், தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராகக் இருந்த எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. இதில் டி.கே. மகாதேவன் என்ற கேரக்டரில் துல்கர் சல்மான், நடித்துள்ளார். செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில், சமுத்திரக்கனி, ராணா டகுபதி, பாக்கியஸ்ரீ போர்சே உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 14-ந் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில், இன்று (நவம்பர் 6) சென்னை சத்யம் சினிமாஸில் நடைபெற்ற ‘காந்தா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் துல்கர் சல்மான் பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதில் பேசிய அவர், “எனக்குத் தமிழ் என்றால் மிகவும் பிடிக்கும். பள்ளியில் தமிழ் தான் எனது மூன்றாவது மொழி. எனது மலையாள இயக்குநர்கள் கூட, ‘நீங்கள் தமிழ் நன்றாகப் பேசுகிறீர்கள், ஆனால் மலையாளத்தில் கொஞ்சம் திணறுகிறீர்கள் என்று சொல்வார்கள்.சினிமா வரலாறு மொத்தமும் கோடம்பாக்கத்தில் தொடங்கியது. இங்கிருந்து தான் மற்ற மொழி படங்கள் வெளியில் போய் இருக்கிறது. அந்த ஸ்டுடியோ கலாச்சாரத்தைக் கொண்டாடும் ஒரு முயற்சியாகவே ‘காந்தா’ உருவாகியுள்ளது, ஸ்டூடியோவில் இருந்த அனுவத்தை கொடுக்கும் இந்த படம் மற்ற மொழிகளில் டப் செய்யவில்லை. தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டும தான். எனது வாழ்க்கையில் இவ்வளவு திரைக்கதை விவாதக் கூட்டங்களில் நான் கலந்துகொண்டதில்லை. #DulquerSalmaan at #Kaantha Event :”I love Tamil a lot.. Tamil was the Third language in my school.. Even my Malayalam directors say that I speak Tamil well more than Malayalam..😄 Film history was in Kodambakkam.. Kaantha celebrates studio culture..🤝” pic.twitter.com/WLmXfVpJ6hஇந்த விவாதங்கள் நடந்த காலத்தில் 8-10 படங்களை நான் முடித்திருப்பேன். இருப்பினும், இது சாதாரணப் படம் அல்ல. எனக்குத் பீரியாடிக் படங்கள் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அது எனக்கு டைம் ட்ரால் போன்றது. ‘காந்தா’ ஒரு கலைப் படம் அல்ல. இது மிகவும் வர்த்தக ரீதியான திரைப்படம். இவ்வளவு சுவாரஸ்யமான நாடகத்தைப் பார்த்து ரொம்ப நாளாகிறது. இது உங்கள் அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்,” என்று துல்கர் சல்மான் பேசியுள்ளார்.காந்தா படத்தின் ட்ரெய்லர் வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் பாரம்பரியத் தோற்றம், வண்ணமயமான காட்சிகள், பழம்பெரும் காலத்தைப் பிரதிபலிக்கும் செட் வடிவமைப்புகள் மற்றும் காட்சிகளின் உணர்ச்சிப்பூர்வமான ஆழம் ஆகியவற்றால் இது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. ‘காந்தா’, பழைய தமிழ்த் திரைக் கலாச்சாரம் மற்றும் இசை சார்ந்த கதை சொல்லலின் கலவையாகும். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version