பொழுதுபோக்கு
பாடல் உரிமை எனக்கு மட்டும் தான், தயாரிப்பாளருக்கு கொடுத்ததே இல்லை; ஐகோர்ட்டில் இளையராஜா தரப்பு வாதம்
பாடல் உரிமை எனக்கு மட்டும் தான், தயாரிப்பாளருக்கு கொடுத்ததே இல்லை; ஐகோர்ட்டில் இளையராஜா தரப்பு வாதம்
பாடல்கள் காப்புரிமை தொடர்பான வழக்கு நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வரும நிலையில், இதில் பாடல்களின் உரிமையை எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு கொடுத்ததே இல்லை என்று இளையராா தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. 70-களின் இறுதியில் தொடங்கி இன்றுவரை தமிழ் சினிமாவில் இசையில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் இளையராஜா. அன்னக்கிளி படம் தொடங்கி அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், ஓடாத கதையையும் தனது இசையால் ஒட வைப்பார் என்ற பெருமையை பெற்றுள்ளார். தனது பாடல்கள் மூலமாகவே பல படங்களை ஓட வைத்த பெருமை இளையராஜாவுக்கு உண்டு. தற்போது 75 வயதை கடந்தவராக இருந்தாலும், இளம் இசையமைப்பாளர்களுக்கு போட்டியாக வலம் வரும் இளையாஜா, பாடல் காப்புரிமை விவகாரத்தில் கண்டிப்பு காட்டி வருகிறார்.தனது பாடல்களை மற்றவர்கள் பயன்படுத்த இளையராஜா அனுமதி கொடுப்பதில்லை. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில், தனது பாடல்கள் பயன்படுத்தியது தொடர்பாக இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ‘ஒத்த ரூபாய் தாரேன்’, ‘ஏன் ஜோடி மஞ்சக் குருவி’, ‘இளமை இதோ இதோ’ ஆகிய பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். மேலும், அந்த படத்தில் இருந்து பாடல்களை நீக்க வேண்டும். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். ரூ 5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.இதனிடையே பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், பாடல்களின் காப்புரிமை எப்போதும் இசையமைப்பார்களிடமே உள்ளது. தயாரிப்பாளர்களிடம் கொடுத்ததே இல்லை என்று இளையராஜா தரபபினர் வாதம் செய்துள்ளனர். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இளையராஜா, “பாடலின் உரிமையை தயாரிப்பாளர்களிடம் எப்போதும் வழங்கியது கிடையாது. காப்புரிமை சட்டத்தின் படி பாடலின் உரிமை இசையமைப்பாளரிடம்தான் இருக்கிறது. அதிலும் பாடல்களை உருமாற்றம் செய்வது சட்டபடி தவறு என இளையராஜா தரப்பு தெரிவித்திருந்தார்.அப்போது சோனி தயாரிப்பு நிறுவனம், “பாடல்களை ஓடிடியில் இருந்து நீக்கிவிட்டோம். எனவே இளையராஜா அந்த பாடல்களின் உரிமை அவரிடம் இருந்தால் நிரூபிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.