இலங்கை
பாதாள கும்பலுக்காக கள்ள கடவுச்சீட்டுக்களை தயாரித்த கே.ஜே. பாய் !!
பாதாள கும்பலுக்காக கள்ள கடவுச்சீட்டுக்களை தயாரித்த கே.ஜே. பாய் !!
இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு மோசடியாக மொரீசியஸ் நாட்டுக்கான கள்ள கடவுச்சீட்டுக்களை தயாரித்த விடயத்தை கே.ஜே. பாய் வெளிப்படுத்தியுள்ளார்.
ஜே.கே. பாய் என அழைக்கப்படும் கெனடி செபஸ்தியன் பிள்ளை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் சேர்ந்தவராவார்.
கெஹல்பத்தர பத்மே, இஷாரா செவ்வந்தி, பெக்கோ சமன், அவரது மனைவி, பத்து வயது சிறுமி உள்ளிட்ட பாதாள உலகத்துடன் தொடர்புடைய பலருக்கு மொரீசியஸ் கடவுச்சீட்டுகளை தயாரிப்பதில் ஜே.கே. பாய் முக்கிய மூளையாக செயற்பட்டுள்ளார்.
மொரீசியஸ் கடவுச்சீட்டு துருக்கியில் உள்ள ஒரு கடத்தல்காரரால் தயாரிக்கப்பட்டதாகவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. துருக்கி கடத்தல்காரரின் பணி டுபாயில் வசிக்கும் ஒரு அரபு நாட்டவருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரு கடவுச்சீட்டை தயாரிக்க பத்து இலட்சம் ரூபாவுக்கும் மேல் வசூலிக்கப்படுவதாகவும், கே.ஜே பாய் 20 கடவுச்சீட்டுக்களுக்கு மேல் தயாரித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
இலங்கை குற்றவாளிகளுக்கு மட்டுமன்றி இந்திய குற்றவாளிகளுக்கும் மொரீசியஸ் கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜே.கே. பாய் என்ற இந்த ஆட்கடத்தல்காரருக்கு தாய்லாந்து, இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, நேபாளம், துபாய், மொரீஷியஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த மனித கடத்தல்காரர்களுடன் தொடர்பு உள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக இன்டர்போல் மற்றும் இராஜதந்திர வழிகள் மூலம் தொடர்புடைய நாடுகளுக்குத் தெரிவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை