பொழுதுபோக்கு

மடியில் அமர்ந்த குழந்தை, செல்ஃபி எடுக்க பர்மிஷன் கேட்ட விஜய்; பாலா சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்!

Published

on

மடியில் அமர்ந்த குழந்தை, செல்ஃபி எடுக்க பர்மிஷன் கேட்ட விஜய்; பாலா சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்!

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. இவரது படம் வித்தியாசமான கதை அம்சத்தை கொண்டிருக்கும். நடிகர் விக்ரமை வைத்து இவர் இயக்கிய ‘சேது’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல், இப்படம் பாலாவிற்கு சினிமாவில் சிறந்த அறிமுகத்தையும் கொடுத்தது. ‘சேது’ திரைப்படம் தான் விக்ரமின் சினிமா வாழ்க்கையை மாற்றியது என்று கூறலாம். இதையடுத்து இயக்குநர் பாலா சூர்யாவை வைத்து ’நந்தா’, ’பிதாமகன்’, ஆரியாவை வைத்து ’நான் கடவுள்’ என அடுத்தடுத்து படங்களை இயக்கினார். ’நான் கடவுள்’ படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். இதன் மூலம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தார். இவர் இதுவரை 10 படங்களை இயக்கி இருக்கிறார். கடைசியாக இவரது இயக்கத்தில் ’வணங்கான்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்களுக்கு வெளியானது. இப்படத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இயக்குநர் பாலா, நடிகர் விஜய் குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது,  “விஜயை எனக்கு ரொம்ப பிடிக்கும். என் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது விஜயை யார் என்று தெரியாமலயே என் குழந்தை அவர் மடியில் அமர்ந்தது. குழந்தையுடன் புகைப்படம் எடுப்பதற்காக போனை எடுத்த விஜய் என்னிடம் ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக் கொள்ளவா? என்று கேட்டார். மிகவும் ஒழுக்கமான ஒரு நபர் விஜய். ஒரு நேரம் விஜய் வந்தபோது நான் கால் மேல் கால் போட்டிக் கொண்டு இருந்தேன் என்று பேசுப்பொருளாக மாற்றினார்கள். அது கவனக்குறைவில் நடந்த விஷயம். அப்படி என்றாலும் அவர் என்னை விட வயதில் சிறியவர் தானே. நான் ஏன் எழுந்து நிற்க வேண்டும். யாரையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படி செய்யவில்லை. அது கவனக்குறைவால் நடந்தது. என்னை பற்றி எனக்கு தெரியும் நான் யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று இல்லை. அப்படி விளக்கம் கொடுத்தல் தினமும் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கும் வேலை பார்க்க முடியாது” என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version