பொழுதுபோக்கு
“மிரட்டி திருமணம் செய்தாரா?” – மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை; ஜாய் கிரிசில்டா வெளியிட்ட ‘லவ் யூ’ வீடியோ!
“மிரட்டி திருமணம் செய்தாரா?” – மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை; ஜாய் கிரிசில்டா வெளியிட்ட ‘லவ் யூ’ வீடியோ!
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா ஆகியோருக்கு இடையேயான திருமணப் பிரச்சினை தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ஜாய் கிரிசில்டா அளித்த புகாரும், அதனைத் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட மறுப்பு அறிக்கையும் இச்சிக்கலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. அதுமட்டுமின்றி ஜாய் கிறிஸில்டாவிற்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா, சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாகக் கூறி அண்மையில் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். விசாரணை குறித்துப் பேசிய ஜாய் கிரிசில்டா, “மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என்று மகளிர் ஆணைய விசாரணையில் ஒப்புக் கொண்டார். மேலும், அவர் ‘டிஎன்ஏ டெஸ்ட் வேண்டாம்’ என்றும் தானாகவே சொன்னார். ஆனால், நான் டிஎன்ஏ டெஸ்ட் வேண்டும் என வலியுறுத்தினேன்” என்று கூறியிருந்தார்.இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா??! Mr husband @MadhampattyRR ?மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க — இதுல லவ் லா பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா?கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்ற மாதிரி 😂😂This message was sent to me by my so-called… pic.twitter.com/AH8yekYNBsஜாய் கிரிசில்டாவின் இந்தக் கூற்றை மறுக்கும் விதமாக மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், அவர், “ஜாய் கிரிசில்டா என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார்” என அதிர்ச்சி தகவலைக் குறிப்பிட்டிருந்தார். மாதம்பட்டி ரங்கராஜின் ‘மிரட்டி திருமணம்’ என்ற கூற்றிற்கு விளக்கமளித்த ஜாய் கிரிசில்டா, “மகளிர் ஆணையத்திலிருந்து வந்த தகவலை ஊடகத்தினர் வெளியிட்டனர். என்னை திருமணம் செய்தது உண்மைதான் என மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டது அனைவரும் அறிந்ததே. மாதம்பட்டி ரங்கராஜை மிரட்டி திருமணம் செய்து கொள்ள அவர் என்ன குழந்தையா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.இந்தச் சூழலில், தனது கூற்றை நிரூபிக்கும் வகையில், மாதம்பட்டி ரங்கராஜ் இதற்கு முன்பு பேசிய ஒரு வீடியோ ஆதாரத்தை ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிசில்டாவைப் பார்த்து, “ஹாய் பொண்டாட்டி, நீ எவ்ளோ அழகு தெரியுமா? அவ்ளோ அழகு. லவ் யூ. சீக்கிரம் வந்துவிடுகிறேன். மிஸ் யூ. ரெடி ஆயிட்டேன். லவ் யூ” எனப் பேசியிருக்கிறார். இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜின் ‘மிரட்டல்’ குற்றச்சாட்டிற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.“இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா? மிஸ்டர் ஹஸ்பண்ட் மாதம்பட்டி ரங்கராஜ்? மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க — இதுல லவ் லா பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா? கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்ற மாதிரி. இந்த வீடியோவை என் ‘சோ கால்டு’ கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் பயணத்தின்போது அனுப்பியது. அவர் பொதுவாக தொலைவில் இருக்கும்போது இப்படியான வீடியோவை அனுப்புவது வழக்கம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.