இலங்கை
முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைத் தேடும் அகழ்வு நடவடிக்கை
முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைத் தேடும் அகழ்வு நடவடிக்கை
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாகச் சந்தேகித்து, முல்லைத்தீவு மாவட்டத்தில், அகழ்வு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, நீதிமன்ற அனுமதியுடன் குறித்த அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முல்லைத்தீவு, இரட்டைவாய்க்கால் பகுதியில், வலைஞர்மடம் சந்திக்கு அருகில், கனரக இயந்திரம் கொண்டு, ஆயுதங்களைத் தேடி 15 அடிக்கு மேல் தோண்டப்பட்டுள்ளது.
எனினும், அங்கு ஆயுதங்கள் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணி கைவிடப்படப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.