இலங்கை
மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயேஸ் நேருக்கு நேர் மோதி விபத்து! இருவர் படுகாயம்
மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயேஸ் நேருக்கு நேர் மோதி விபத்து! இருவர் படுகாயம்
மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயேஸ் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கோர விபத்து சிலாபம்,மரவல பகுதியில் நேற்று புதன்கிழமை(05) பிற்பகல் 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த ஹயேஸ் வாகனமும் எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
படுகாயமடைந்த இருவரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
அத்துடன் விபத்தில் மோட்டார் சைக்கிள் பாகங்கள் நொருங்கி வீதியில் சிதறிக்கிடந்துள்ளன.
ஹயேஸ் வாகனத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை