இலங்கை

யாழில் சுனாமி ஒத்திகை பயிற்சி!

Published

on

யாழில் சுனாமி ஒத்திகை பயிற்சி!

இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் முன்னாயத்த நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக வருடாந்தம் ஒழுங்குசெய்யப்படுகின்ற பிராந்திய நாடுகளுக்கான சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று காலை பருத்தித்துறை  மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் ஆரம்பமாகியது.

காலை 9:15 மணியளவில் சுனாமி எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவிகள் வகுப்பு வகுப்பாக அணிவகுக்கப்பட  அங்கு  உரியவர்கள் அறுவுறுத்தப்பட்டனர். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் இடைத்தங்கல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு மருத்துவ வசதிகள், உணவு, உட்பட பல்வேறு வசதிகளும் ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தன.

Advertisement

வட இந்து மகளிர் கல்லூரியில் வகுப்பு வகுப்பாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டதுடன் கிராம மக்களும தங்கவைக்கப்பட்டனர். இதேவேளை ஒத்திகையின்போது பாதுகாப்பாக நகர்ந்த மக்கள், மாணவர்களில் ஒருசிலரிற்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்தவர்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சென்ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் பருத்தித்துறை பொலிஸார் ஆகியோர் ஏற்றிவந்து வட இந்து மகளிர் கல்லூரியல் ஏற்பாடு செய்யப்பட்ட முதலுதவி சிகிச்சை நிலையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டனர்.

இவ் ஒத்திகை நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம்,  இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சென்ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் படைப்பிரிவு, பருத்தித்துறை ஆதார மருத்துவமனை , பருத்தித்துறை பொலிஸார், கடற்படை, இராணுவம், சிறப்பு அதிரடி படை, பருத்தித்துறை மகரசபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர், கியூமெடிக்கா உட்பட பல்வேறு அமைப்புக்கள் மற்றும்  திணைக்களங்கள் பங்குபற்றியிருந்தன.

இச் சுனாமி  ஒத்திகை நிகழ்வில்  வடமராட்சி மெதடிஸ்த பெண்கள்  கல்லூரி மாணவர்கள் சுமார் 500க்கு மேற்பட்டோரும், பொதுமக்கள் சுமார் 250 பேரும் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த ஒத்திகை நிகழ்வு வருடாந்தம் இடம் பெறுவதும்  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version