இலங்கை

பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை !!

Published

on

பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை !!

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் 

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் அடிப்படையில் பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனைகளை மேற்கொள்ள இலங்கை பொலிஸ் நேரடியாக பங்களிப்பு வழங்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

Advertisement

மேலும், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, போதைப்பொருளை ஒழிக்க அனைத்து வழிகளிலும் பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அத்துடன், பாடசாலை மட்டத்தில், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைகளில் பல்வேறு போதைப்பொருள் தடுப்பு திட்டங்களை ஆரம்பித்துள்ளனர். 

பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுகளுக்கு பொலிஸ் நாய்களின் உதவி தேவைப்பட்டால், தொடர்புடைய பாடசாலையின் அதிபர் இலங்கை பொலிஸ் நாய் பிரிவின் பணிப்பாளரை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

                                                                              

                                                               

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version