சினிமா
பிக்பாஸ் சீசன் 9 வீட்டைவிட்டு வெளியேறிய போட்டியாளர்? காரணம் இதுதான்..
பிக்பாஸ் சீசன் 9 வீட்டைவிட்டு வெளியேறிய போட்டியாளர்? காரணம் இதுதான்..
பிக்பாஸ் சீசன் 9 கடந்த அக்டோபர் 5 ஆம் தேதியில் இருந்து விஜய் சேதுபதி தலைமையில் ஒளிப்பரப்பாகி வருகிறது. 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் அனுப்பட்ட நிலையில் இதுவரை, நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா சிஜே, ஆதிரை, கலையரசன் போன்றவர்கள் வெளியேறினர்.இதனையடுத்து கடந்த வாரம் 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் பிக்பாஸ் 9 வீட்டிற்குள் உள்ளே வந்து காரசாராமான கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர்.மேலும் ஹோட்டல் டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சிறப்பு விருந்தினராக தீபக், பிரியங்கா, மஞ்சரி ஆகீயோரை போட்டியாளர்கள் சிலர் சங்கடத்தில் ஆழ்த்தினர்.தீபக் கண்ணீர் வீட்டு அழும் அளவிற்கு, போட்டியாளர்கள் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்று இருக்கிறார்கள். இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளரான கெமி, பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.அதாவது ஈரப்பதம் காரணமாக தோல் உரிந்து வந்ததால், போட்டியாளர் கெமி, மருத்துவ சிகிச்சைக்காக வெளியே அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.