பொழுதுபோக்கு
ஆட்டோகிராப் படத்தின் போது ஏற்பட்ட மனக் கஷடம்… 21 வருடம் கழித்து மனம் திறந்த சினேகா!
ஆட்டோகிராப் படத்தின் போது ஏற்பட்ட மனக் கஷடம்… 21 வருடம் கழித்து மனம் திறந்த சினேகா!
ஆட்டோகிராஃப் படத்தில் நடிக்கும்போது கடுமையான மன உளைச்சலில் இருந்தேன். அது யாருக்குமே தெரியாது இந்த படத்தின் மூலம் 21 வருடங்களாக எனக்கு ஒரு பெஸ்ட் ப்ரண்ட் இருக்கிறார் என்று நடிகை சினேகா உருக்கமாக பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் 1997-ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சேரன். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்து, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டிவர் பூமி உள்ளிட்ட தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தவர் சேரன். இதில், வெளிநாடு செல்வதற்காக பணம் கட்டி ஏமாற்றம் அடைந்தவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்த வெற்றிக்கொடி கட்டு பலரின் பாராட்டுக்களை பெற்றது. அதேபோல், கூட்’டு குடும்பத்தின் அவசியத்தை வலியுறுத்தும் பாண்டவர் பூமி, சாதி கடந்த காதலை மையப்படுத்திய பாரதி கண்ணம்மா, மாற்றுத்திறனாளி பெண்ணின் வாழ்வியலை சொல்லும் பொற்காலம் என சேரன் இயக்கிய அனைத்து படங்களிலும் எதாவது ஒரு வகையில், சமூகத்திற்கு கருத்துக்களை வலியுறுத்தும் படமாக அமைந்தது. அதேபோல் காதல் தோல்வி, வேலை தேடி அலையும் இளைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்த படம்தான் ஆட்டோகிராஃப். சேரன் ஹீரோவாக நடித்த முதல் படமாக இந்த படத்தில் கோபிகா, சினேகா, மல்லிகா, கனிகா என பலர் நடித்திருந்தனர். 2004-ம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற, ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இதனிடையே இந்த படம் 21 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. ரீ-ரிலீஸ் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சினேகா, பேசுகையில், சேரன் உண்மையில் உங்களுக்கு எத்தனை லவ் இருந்துது அதற்கு பதில் சொல்லுங்க. இந்த படம் நடிக்கும்போது கடுமையான மன உளைச்சலில் இருதேன். அப்போது என் அருகில் வந்து அமர்ந்து என்ன பிரச்னை என்று கேட்டவர் சேரன். நான ஒன்றும் இல்லை என்று சொனனாலும், இல்லை ஏதோ பிரச்னை இருக்குனு எனக்கு தெரியும். எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார். அங்கிருந்து தொடங்கியது எங்கள் நட்பு இன்றுவரை தொடர்கிறது. சினிமாவில் என் நெருங்கிய நண்பர் சேரன் ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா என்று இந்த படம் வெளியானபோது கேட்டார்கள்.நண்பர்களாக இருக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறோம். இந்த படம் ரீ-ரிலிஸ் ஆகிறது என்று தெரிந்தவுடன் என் அப்பா இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று சொன்னார். இப்போது வித்தியாசமான பல காதல்கள் இருக்கிறது. ஆனால் காதல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். சினிமாவில் நான் நடித்த சிறந்த படம். இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று சினேகா பேசியுள்ளார்.