பொழுதுபோக்கு

ஆணித்தரமாக பேசிய கௌரி கிஷன்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டு

Published

on

ஆணித்தரமாக பேசிய கௌரி கிஷன்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டு

கௌரி கிஷன் தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்த செயல்பாடுகளுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறது. ‘அதர்ஸ்’ திரைப்படம் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பு 6-11-2025 அன்று நடந்துள்ளது. இச்சந்திப்பில் திரைப்படக் குழுவினருடன் பங்கு கொண்ட திரை கலைஞர் கெளரி கிஷன் அவர்களின் உடல் எடை குறித்து கேள்வி கேட்ட யூடியூபரின் செயல்பாட்டை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டித்துள்ளது. இது குறித்து இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியீட்டுள்ள அறிக்கையில், “திரைப்படம் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் அத்திரைப்படத்தில் பங்களிப்பு செய்த பெண் கலைஞரின் உடல் எடை கேலிக்கு உள்ளாக்கும் நோக்கத்தோடு, கேள்வி கேட்பது அநாகரீகமானது, அருவருக்கத்தக்கது.  குறிப்பாக இக்கேள்விக்கு திரை கலைஞர் கெளரி கிஷன் தனது எதிர்ப்பை தெரிவித்த பிறகும் உடல் எடை குறித்து கேள்வியை நியாயப்படுத்தி பெண் திரைக் கலைஞரை நோக்கி கடினமான குரலில் எதிர் விவாதம் நடத்திய யூடியூபரின் செயல்பாடுகளை பத்திரிகையாளர் மன்றம் சென்னை வன்மையாகக் கண்டிப்பதோடு  இதுபோன்று அருவருக்கத்தக்க ஆணாதிக்க மொழியில் செயல்படுகிறவர்களை சக பத்திரிகையாளர்கள் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்த விரும்புகிறது.மேலும் பத்திரிகையாளர் சந்திப்பில், கூட்டாக பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் திரை கலைஞர் கௌரி கிஷன் தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்த செயல்பாடுகளுக்கு சென்னை பத்திரிகையாளர் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version