சினிமா

இது Stupid Question.. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.! யூடியூபரை வெளுத்து வாங்கிய நடிகை

Published

on

இது Stupid Question.. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.! யூடியூபரை வெளுத்து வாங்கிய நடிகை

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த 96 படத்தின்,  திரிஷாவின் சிறு வயது கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை கௌரி கிஷன்.  இந்த நிலையில், நடிகை கௌரி கிஷன் நடிப்பில் வெளியாகும் ‘அதர்ஸ்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில், ஒரு யூடியூபர் தன்னிடம் கேலி செய்யும் வகையில் கேள்வி கேட்டதாக குற்றம் சாட்டி, அவரை சரமாரியாக சாடியுள்ளார்.அபின் ஹரிஹரன் இயக்கத்தில், அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் ’96’ பட நடிகை கௌரி கிஷன் நடிப்பில் ‘அதர்ஸ்’ (Others) திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ‘அதர்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா செய்தியாளர் சந்திப்பில், ஒரு யூடியூபர் படத்தின் கதாநாயகன் ஆதித்யா மாதவனிடம் “இந்தப் படத்தின் பாடலில் ஹீரோயினை தூக்கினீர்களே, எவ்வளவு வெயிட் இருந்தார்?” என்று கேள்வி கேட்டார்.அந்த கேள்வியை ஆதித்யா மாதவன் “நான் நிறைய உடற்பயிற்சி செய்வதால், எனக்கு அவர் வெயிட்டாக தெரியவில்லை” என்று சாதுர்யமாக கடந்து சென்றார்.இந்த சம்பவம் குறித்து பின்னர் ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கௌரி கிஷன், “எனது எடை குறித்து இது போன்ற முட்டாள்தனமான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இத்தனைக்கும் அவர்கள் அனுபவம் வாய்ந்த வயதான யூடியூபராக இருந்து கொண்டு, இதுபோன்ற கேள்விகள் முறையானது அல்ல” என்று கடுமையாக விமர்சித்தார்.மேலும், “இந்த வீடியோவை அவர் பார்க்கிறார் என்றால், அவரிடம் இதை சொல்ல நினைக்கிறேன். நீங்கள் செய்தது மிகவும் தவறு. இதை வேறு யாருக்கும் செய்யாதீர்கள். மூளையே இல்லாதவர் பேசியதை போல பேசி இருந்தார்” என்று கூறியிருந்தார்.இதை தொடர்ந்து ‘அதர்ஸ்’ படத்தின் சிறப்பு திரையிடல் மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அந்த யூடியூபரும் கலந்து கொண்டார். அவரைப் பார்த்த கௌரி கிஷன் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.அதன்படி, நீங்கள் அன்னைக்கு கேட்ட கேள்வி ரொம்ப அவமரியாதையான கேள்வி. அது ஜனர்லிசமே கிடையாது. என்னுடைய எடையை தெரிஞ்சுகிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க? Body Shaming பன்னாதீங்க. படத்துக்கும் என்னுடைய வெயிட்டுக்கும் என்ன சம்பந்தம்?ஒரு ஹீரோவைப் பார்த்து இப்படி கேப்பீங்களா? இந்த இடத்தில் நான் மட்டும் தான் ஒரு பெண். மற்ற எல்லாரும் ஆண்கள் தான். நான் குறி வைக்கப்பட்டதாக உணர்கிறேன்.நான் இங்கு இருக்கும் ஒரே பெண். சுற்றி இத்தனை பேர் இருக்கிறீர்கள், ஒரு பெண் கூட இல்லை, இப்படி கத்துகிறார். ஒரு பெண் என்பதால் என்னை டார்கெட் செய்து கேள்வி கேட்கிறார். யாரும் அதற்கு கேள்வி எழுப்பமாட்டீர்களா? என்று கேட்டார்.யூடியூபர் பதிலுக்கு, உங்களிடம் மோடியைப் பற்றியா கேட்க முடியும்? குஷ்பு, சரிதா என எல்லாருமே இந்த கேள்வியை எதிர்கொண்டவர்கள் தான்  என்று கூறினார்.பின்பு அந்த யூடியூபர் “நீங்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூற, பதிலுக்கு கௌரி கிஷன் “நீங்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூற மீண்டும் வாக்குவாதம் முற்றியது.இந்த வாக்குவாதத்தால் நிகழ்ச்சி அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. யூடியூபர்கள் சிலர் மாறி மாறி சத்தம் எழுப்பியதால், கௌரி கிஷன் மனம் உடைந்து கண் கலங்கினார். தொடர்ந்து தன் தரப்பில் உள்ள நியாயத்தை பேசிய கௌரி கிஷன், செய்தியாளர் சந்திப்பு முடிந்து மௌனமாக புறப்பட்டு சென்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version