சினிமா

இரண்டாம் திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்யுக்தா… வைரலான பேட்டி.!

Published

on

இரண்டாம் திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்யுக்தா… வைரலான பேட்டி.!

தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தற்பொழுது செய்தி ஒன்று வைரலாகி வருகின்றது. முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஷ் ஸ்ரீகாந்தின் மகன் மற்றும் முன்னாள் CSK வீரர் அனிருதா ஸ்ரீகாந்த், நடிகை சம்யுக்தாவை இரண்டாம் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சம்யுக்தா, தனது சமீபத்திய பேட்டில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, இந்தத் திருமணம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும், எனவும், இது குறித்து வெளியான தகவல்கள் உண்மையானவை என்றும் தெரிவித்துள்ளார். இருவரும் ஏற்கனவே முன்னொரு திருமணத்தை முடித்து பிரிந்தவர்கள். அதன்பின் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்காக திருமண ஏற்பாடு செய்து வருகின்றனர். சம்யுக்தா மற்றும் அனிருதா ஸ்ரீகாந்தின் திருமணம், அவர்களது ரசிகர்களுக்கு மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிரிஷ் ஸ்ரீகாந்த் குடும்பத்தின் வருங்கால மருமகள் சம்யுக்தா என்பதும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், ரசிகர்கள் சம்யுக்தா மற்றும் அனிருதா ஸ்ரீகாந்தின் இணைப்பை பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version